சாஃப்ட்வேர் துறையில் சாதித்த ஸ்ரீதர் வேம்பு தற்போது கருவி என்னும் பிராண்டில் பவர் டூல்ஸ் தயாரிப்பில் புதிய அத்தியாயத்தை எழுதி வருகிறார். இதேபோல் செமிகண்டக்டர் டிசைன் பிரிவிலும் இறங்குவது குறித்து பல மாதங்களாக ஆய்வு செய்து வருகிறார். ஸ்ரீதர் வேம்பு தனது சொந்த நிறுவனமான ஜோஹோவின் வெற்றியைத் தொடர்ந்து, புதிய துறையில் கால் பதிக்க முயற்சித்து வருகிறார்.
இந்த இரு நிறுவனங்கள் குறித்த முக்கியமான அப்டேட்-ஐ சமீபத்தில் திருநெல்வேலி ZOHO அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசும் போது அறிவித்தார். இந்த கூட்டத்தில் அவர் பேசியது என்ன..? பவர் டூல்ஸ் தயாரிப்பிலும், செமிகண்டக்டர் டிசைன் பிரிவிலும் Zoho செய்யப்போவது என்ன..?

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு உலகின் பல நாடுகளில் வர்த்தகம் செய்யும் ZOHO தற்போது தென்காசியில் உள்ள மத்தளம்பாறை, மதுரையில் உள்ள கப்பலூர் மற்றும் திருநெல்வேலியில் உள்ள தருவாய் ஆகிய இடங்களில் அலுவலகங்கள் திறந்து கிராமப்புற வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
இதில் திருநெல்வேலியில் உள்ள தருவாய் அலுவலகம் தான் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் பேசிய ஸ்ரீதர் வேம்பு பவர் டூல் நிறுவனமான கருவி நிறுவனத்திற்கான புதிய தொழிற்சாலையைத் திருநெல்வேலியில் சேரன்மாதேவி பகுதியில் அமைக்க உள்ளதாகவும், இதற்கான இடத்தை தேடி வருவதாகவும் பேசினார்.
இதை தொடர்ந்து பல மாதங்களாகத் திட்டமிட்டு வரும் செமிகண்டக்டர் டிசைன் நிறுவனத்திற்குத் தென்காசி செமிகண்டக்டர் என பெயரிட ஐடியா உள்ளதாக தெரிவித்தார்.
பொதுவாக பெரும் முதலாளிகள் நகரங்களை நோக்கியும், வெளிநாடுகளை நோக்கியும் செல்லும் வேளையில், ZOHO ஸ்ரீதர் வேம்பு புதிய மாற்றத்தை தொழில்முனைவோர் மத்தியில் கொண்டு வந்துள்ளார்.
கருவி - தமிழ் பெயரில் உருவாக்கப்பட்ட கருவி பிராண்ட், பல்வேறு வகையான மின் கருவிகளை உற்பத்தி செய்கிறது. துளையிடும் இயந்திரங்கள் முதல் ஆங்கிள் கிரைண்டர்கள் வரை, இந்தியாவின் உற்பத்தித் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உயர்தரமான கருவிகளை வழங்குகிறது.
உள்ளூர் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு: கருவி நிறுவனம், அதன் தயாரிப்புகளில் 95% உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் உற்பத்தி செய்கிறது. இதன் மூலம், உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்வதோடு, பல நூறு பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் தொழிற்புரட்சி: ஸ்ரீதர் வேம்பு-வின் இந்த முயற்சி, தென்காசி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிராண்டுக்காக தென்காசியில் மாதாபுரத்தில் கருவி தொழிற்சாலை முதற்கட்டமாக அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது திருநெல்வேலி சேரன்மாதேவி பகுதியில் புதிய தொழிற்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.
எதிர்கால திட்டம்: கருவி நிறுவனம், தனது தயாரிப்பு வரிசையைப் பெரிய அளவில் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் 30 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் இலக்கை கருவி நிர்வாகம் கொண்டுள்ளது.
செமிகண்டக்டர் டிசைன்- தமிழ்நாட்டில் தொழில்நுட்பத் துறையில் புதிய அத்தியாயம் எழுத ஜோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு இந்த வருடம் மார்ச் மாதத்தில் தனது டிவிட்டர் பதிவின் வாயிலாக, தென்காசியில் செமிகண்டக்டர் சிப் டிசைன் மையத்தை நிறுவ திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். இந்த நிறுவனத்திற்குத் தான் தற்போது தென்காசி செமிகண்டக்டர் என பெயரி திட்டமிட்டு வருவதாகக் கூறினார்.
தென்காசியில் புதிய டிசைன் சென்டர்: ஸ்ரீதர் வேம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த திட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து வெளியான தகவல் படி ஜோஹோ நிறுவனம் ஸ்பெஷல் கமர்சியல் அப்பிளிகேஷன்ஸ்-ல் பயன்படுத்துவதற்காக Compound Semiconductors தயாரிக்கத் திட்டமிட்டு உள்ளதாக்கத் தெரிகிறது.
தென்காசியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் செல் பிரிவின் தலைவர் அனந்தன் அய்யாசாமி, தென்காசியில் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஸ்ரீதர் வேம்புவும் அனந்தன் அய்யாசாமியும் இணைந்து தென்காசியில் இந்த செமிகண்டக்டர் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக டிவிட்டரில் அப்போது தெரிவித்தார் ஸ்ரீதர் வேம்பு.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications