தென்காசி: தமிழ்நாட்டு ஸ்டார்அப் துறையிலும், SAAS பிரிவில் முடிசூடா மன்னனாக இருக்கும் ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு சமீபத்தில் மென்பொருள் சேவை அல்லாத பல துறையில் இறங்கி அசத்தி வருகிறார். அந்த வகையில் ஸ்ரீதர் வேம்பு முதலீட்டிலும், அவரது சொந்த பிரான்டிங் அறிமுகம் செய்யப்பட்டது தான் கருவி.
ஆம் தமிழ் பெயரில் பிராண்டிங்-ஐ உருவாக்கி இந்தியா முழுவதும் பவர் டூல்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தைத் துவங்கினார். இதை வெறுமென அறிமுகம் செய்யாமல் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் பெரும் தொகையை முதலீடு செய்து தற்போது பவர் டூல்ஸ் செய்வதற்காகத் தனிப்பட்ட ஆலையைத் திறந்துள்ளதாகச் சனிக்கிழமை அறிவித்தார்.

தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் ஸ்ரீதர் வேம்பு குடியேறியது மட்டும் அல்லாமல் தனது ZOHO நிறுவனத்தின் முக்கிய தலைமை அலுவலகத்திற்கு நிகரான CEO அலுவலகத்தை அமைத்தார். இதைத் தொடர்ந்து தென் தமிழ்நாட்டு மாவட்டத்தில் பல ZOHO கிளைகளைத் திறந்து அசத்திய ஸ்ரீதர் வேம்பு தற்போது கிராமப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாகக் கருவி பிராண்டுக்காக தென்காசி மாவட்டத்தின் சிறிய கிராமமான மாதாபுரத்தில் புதிய தொழிற்சாலை அமைந்துள்ளது. இது, மத்தளம்பாறை கிராமத்தில் உள்ள ஜோஹோ அலுவலகத்திற்கு அருகில் உள்ளது.

இதுகுறித்து ஸ்ரீதர் வேம்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறுகையில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 15 திறமையான இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களை ஆலையில் பணியில் அமர்த்தியுள்ளோம். கிராமப்புற தொழிற்சாலைகளை ஊக்குவிப்பதற்கான ஒரு பெரிய கனவின் சிறிய தொடக்கம் இது என்று தெரிவித்துள்ளார்.
பவர் டூல்ஸ் தயாரிக்கும் கருவி நிறுவனம், துளையிடும் இயந்திரங்கள், angle grinders, power saw, என பல்வேறு வகையான 10 மின் கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. கருவி நிறுவனத்தின் தயாரிப்புகள் சுமார் 95 சதவீதம் உள்ளூர் மூலப்பொருட்கள், உதிரிப்பாகங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன.

கருவி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எம்.எஸ்.டி. பிரசாத் அவர்கள் கூறுகையில், "எங்களது தயாரிப்பு வகைகளை மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் குறைந்தது 30 தயாரிப்புகளை வழங்க இலக்கு வைத்துள்ளோம்" எனக் கூறியுள்ளார்.
ஜோஹோ நிறுவனம், சமீபத்தில் கருவி நிறுவனத்தைப் போல் தனது மென்பொருள் சேவைத் துறையைத் தாண்டி யாளி ஏரோஸ்பேஸ் என்ற விண்வெளித் துறை ஸ்டார்ட்அப் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications