சமீப காலமாக பல்வேறு ஐடி நிறுவனங்களும், டெக் நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை அதிகரித்துள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமே இதற்கு காரணம் எனக் கூறப்பட்ட நிலையில் ஸோஹோ நிறுவனத்தின் நிறுவனரும் அதன் தலைமை விஞ்ஞானியுமான ஸ்ரீதர் வேம்பு ஏஐ மட்டுமே இதற்கு காரணம் அல்ல என குறிப்பிட்டு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் மிகப்பெரிய பதிவை வெளியிட்டுள்ளார்.
ஐடி நிறுவனங்களில் இருக்கும் அமைப்பு ரீதியிலான பிரச்சனையே மென்பொருள் வேலைவாய்ப்பில் தற்போது சவால்களை ஏற்படுத்தி இருக்கிறது என ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். மென்பொருள் துறையில் கிட்டதட்ட 30 ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஸ்ரீதர் வேம்பு கடந்த சில தசாப்தங்களாக நிறுவன மென்பொருள்களுக்கு தனியார் பங்கு மற்றும் ஐபிஓ மூலம் நிதி ஆகியவை பெறப்படுவதே இந்த பிரச்சினைக்கு காரணம் என கூறியுள்ளார்.

அதிகளவிலான நிதி வருவதால் நிறுவன மென்பொருள்கள் சாமர்த்தியமற்றதாக மாறியுள்ளன என தெரிவித்துள்ளார். மிகைப்படுத்தப்பட்ட மூலதனம் மென்பொருள் துறையில் ஒரு செயற்கையான விரிவாக்கத்திற்கு வழிவகுத்துள்ளது என்றும் இது போலியான தகவல் தொழில்நுட்ப அமைப்புகள், அதிகப்படியான பணி அமர்த்தல் மற்றும் தவறான ஊக்கத்தொகை ஆகியவற்றை கொண்ட ஒரு சந்தையை உருவாக்கி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மென்பொருள் விற்பனையாளர்களின் மிகத் தீவிரமான சந்தைப்படுத்துதலே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறியுள்ளார். நிறுவனங்கள் வாடிக்கையாளரிடம் பயம், நிச்சயமற்ற தன்மை மற்றும் சந்தேகம் ஆகியவற்றை ஏற்படுத்தும் தந்திரோபாயங்களை நீண்ட காலமாக நம்பியுள்ளன இது அந்த நிறுவனங்களின் ஐடிக்கான செலவினங்களை அதிகரிக்க தூண்டுகிறது என தெரிவித்துள்ளார். அதாவது மென்பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் பயம் (அதாவது காணாமல் போனால் என்ன செய்வது) மற்றும் நிச்சயமற்ற தன்மை (தொழில் நுட்பம் மாறி வருகிறது உங்களுக்கு கண்டிப்பாக நாங்கள் தேவை) மற்றும் சந்தேகம் ( நீங்கள் குழப்பம் அடைகிறீர்களா எங்களை நம்புங்கள்) என்பன போன்ற சந்தைப்படுத்தல் யுக்திகளை கையாள்கின்றன என கூறுகிறார்.
இதனால் பல நிறுவனங்களும் தங்கள் தகவல் தொழில்நுட்ப செலவினங்களை அதிகரித்து இருப்பதாக கூறியுள்ளார் .பெரிய நிறுவனங்கள் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் இதுபோன்ற சந்தைப்படுத்தலில் சிக்கிக்கொண்டு புதிய மென்பொருள் தீர்வுகளை பெற்ற வண்ணம் இருக்கின்றன இது இந்த சிக்கலான அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கும் பராமரிப்பதற்கும் இன்னும் அதிக செலவுகளை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
போலியான ஐடி உள்கட்டமைப்புகள் செயல்பாடுகளை நெறிப்படுத்தவில்லை எனவே தான் அவற்றை தொடர்ந்து இயக்குவதற்கு மனித மூலதனம் தேவைப்பட்டது எனக் கூறியுள்ளார். இது போன்ற நிறுவனங்கள் டாலர் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப வரவு செலவு திட்டங்களை பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டு தங்களுடைய பணிச்சுமையின் பெரும் பகுதியை அவு சோர்சிங் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு சாமர்த்தியமற்ற தன்மைகளை மேலும் பெருக்கி உள்ளன எனக் கூறியுள்ளார்.
மேற்கத்திய நாடுகளில் 5 பேர் தேவைப்படக் கூடிய ஒரு செயல்முறைக்க இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் பில்லிங் நேரத்தை அதிகரிக்க மூன்று அல்லது நான்கு மடங்கு தொழிலாளர்களை ஒதுக்குகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். இதன் விளைவாக இந்திய மென்பொருள் வேலைச் சந்தை உண்மையான உற்பத்தி திறன் ஆதாரங்களில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டன என கூறியுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் மேற்கத்திய சகாக்களுடன் ஒப்பிடும்போது கணிசமாக குறைந்த பட்ஜெட்டுடன் அதிக தகவல் தொழில்நுட்ப செயல் திறனை செய்து காட்டியுள்ளன என குறிப்பிடும் ஸ்ரீதர் வேம்பு, செலவு குறைந்த தீர்வுகளை இந்திய வங்கிகளும் நிதி நிறுவனங்களும் உருவாக்கி இருப்பதே இதற்கு உதாரணம் என தெரிவித்துள்ளார்.
தற்போதைய மென்பொருள் துறையின் மற்றொரு அடிப்படை சிக்கல் செயல் திறனை மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்புகள் இல்லாமல் இருப்பது என அவர் கூறியுள்ளார். தகவல் தொழில்நுட்ப சேவைகளில் பெரும்பாலும் பில்லிங் ஊழியர்கள் பணி செய்யும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டே இருக்கின்றன, அதுதான் பிரச்சனைக்கு காரணம் என கூறியுள்ளார்.
இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம் செய்கின்றன இதற்கு தேவை காரணம் இல்லை என விளக்கியுள்ள ஸ்ரீதர் வேம்பு, ஐடி துறையில் நிலவும் சாமர்த்தியமற்ற கட்டமைப்பு அதிக ஆட்கள் தேவை என்பது போன்ற பிம்பத்தை உருவாக்குகின்றன என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
தற்பொழுது இந்த சமன்பாட்டில் ஏஐ நுழைகிறது என்றும் ஏஐ பெரிய அளவில் மனிதர்களின் வேலையை பறிக்கவில்லை ஆனால் இந்த துறையில் அது தன்னுடைய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். மனிதர்கள் அடிக்கடி செய்ய வேண்டிய கோடிங் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எளிமையாக செய்து காட்டுகிறது எனக் கூறியுள்ளார்.
மனிதர்கள் செய்யும் வேலையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு 10% - 20% வரை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உதவுகிறது எனக் கூறியுள்ளார். 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா பெருந்தொற்று ஆகிய இரண்டு காலக்கட்டத்திலும் பெரிய அளவிலான தொகை ஐடி சேவைகளை நோக்கி சென்றன என கூறியுள்ளார்.
ஆனால் தற்போது ஐடி நிறுவனங்களுக்கு எளிமையாக பணம் கிடைத்தது மாறி இருக்கிறது அதுவே மென்பொருள் சந்தையில் வேலை வாய்ப்பு சவால் மிக்கதாக மாறி இருப்பதற்கு காரணம் எனக் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஐடி வேலையில் குறிப்பிட்ட சில வேலைகளை மனிதர்களுக்கு பதிலாக திறமையாக செய்யக்கூடும், ஆனால் தற்போது மனிதர்களுக்கு மிகப்பெரிய சவால் இந்த ஐடி சேவை சார்ந்த கட்டமைப்பு தான் என தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் எண்ணிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்படாமல் செயல் திறனை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் போது இது மாறும் என கூறியுள்ளார். ஸ்ரீதர் வேம்புவின் இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சமூகவலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பவர். நாட்டு நடப்பு, பொருளாதாரம், ஐடி துறை உள்ளிட்டவை குறித்து தன்னுடைய கருத்துக்களையும் யோசனைகளையும் தெரிவித்து வருகிறார்.
மெட்ராஸ் ஐஐடியில் படிப்பை முடித்த ஸ்ரீதர் வேம்பு 1996ஆம் ஆண்டு மென்பொருள் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். 2009ஆம் ஆண்டு அதற்கு ஸோஹோ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
Story Written : Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications