மைக்ரோசாஃப்டை விட நாங்க பெஸ்ட்.. பகிரங்கமாக சவால் விட்ட Zoho நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு.!

இந்திய மென்பொருள் துறையில் ஒரு முக்கிய நகர்வாக, ஸோஹோ (Zoho) நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டுக்கு (Microsoft) வெளிப்படையாக சவால் ஒன்றை விடுத்துள்ளார். தனது நிறுவனம் இப்போது மைக்ரோசாஃப்ட்டை விட பரந்த மற்றும் சிறந்த தயாரிப்பு தொகுப்பை (Broader and Superior Product Suite) வழங்குவதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், பயனர்கள் ஸோஹோவின் தயாரிப்புகளை 'உறுதியாகப் பார்க்க வேண்டும்' என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஜோஹோ மற்றும் அதன் ஐடி பிரிவான மேனேஜ் என்ஜின் (ManageEngine) ஆகியவற்றின் வளர்ச்சியை காட்டும் படத்துடன் ஸ்ரீதர் வேம்பு ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், "தயாரிப்பு தொகுப்பின் ஆழம் மற்றும் அகலத்தில் மைக்ரோசாஃப்ட்டுடன் போட்டியிடக்கூடிய உலகின் ஒரே நிறுவனம் நாங்கள்தான்" என்று அவர் உறுதியாக கூறியுள்ளார்.

மைக்ரோசாஃப்டை விட நாங்க பெஸ்ட்.. பகிரங்கமாக சவால் விட்ட Zoho நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு.!

மேலும், ஜோஹோவின் தயாரிப்புகள் மிகவும் சிறந்த அனுபவத்தை வழங்குவதாகவும், புதுமைகளை விரைவுபடுத்துவதற்காக கிளவுட் உள்கட்டமைப்பு, ஏஐ தளங்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் ஆகியவற்றில் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீட்டை ஸோஹோ இரு மடங்காக உயர்த்துவதாகவும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதர் வேம்புவின் இந்தப் பதிவு தொழில்நுட்ப வட்டாரங்களில் வைரலான நிலையில், பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர், "இனி ஒரு இந்திய நிறுவனத்தால், ஒரே ஒரு அமெரிக்க SaaS (Software as a Service) கருவியைப் பயன்படுத்தாமல், முழுமையாக ஜோஹோ மூலம் இயங்க முடியும்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அந்தப் பயனர், ஜோஹோ பல முக்கிய அமெரிக்க தளங்களுக்கு முழுமையான மாற்றீடுகளை வழங்குவதைச் சுட்டிக்காட்டினார். அதாவது, Zoho Sheet - Google Sheets-க்கு மாற்று, Zoho Writer - Microsoft Word-க்கு மாற்று, Zoho Cliq - Slack-க்கு மாற்று, Zoho CRM - Salesforce-க்கு மாற்று, Zoho Books - QuickBooks-க்கு மாற்று, Zoho Mail - Gmail-க்கு மாற்று என்று தெரிவித்துள்ளார்.

மேலும், Zoho Work Drive (Drop box/Google Drive), Zoho Marketing Hub (Hub Spot), Zoho Meeting (Zoom), Zoho Connect (Microsoft Teams) போன்ற கருவிகளுக்கும் ஜோஹோ வலுவான மாற்றீடுகளை வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கூகுள் குரோம் அல்லது ஜிமெயில் போன்ற கருவிகளை நிறுவனங்கள் உடனடியாக மாற்றாமல் இருக்கலாம் என்றாலும், அமெரிக்க SaaS சுற்றுச்சூழல் அமைப்பில் இருந்து முழுமையாக வெளியேற ஸோஹோவின் B2B தயாரிப்புகள் போதுமான வலிமையுடன் உள்ளன என்பதே இதன் மூலம் தெளிவாகிறது. ஸ்ரீதர் வேம்புவின் இந்த சவால், இந்தியச் சாஃப்ட்வேர் துறை உலக அளவில் அடைந்துள்ள வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+