ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தங்கள் நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கை (Privacy) குறித்த விரிவான நிலைப்பாட்டை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜோஹோவின் நிலைப்பாடு 3 தனித்தனி சூழ்நிலைகளைக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது. ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவால் முன்வைக்கப்பட்ட The Secret Lover Case, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் ரகசிய தகவல்களை பாதுகாப்பதில் ஜோஹோ எந்த அளவுக்குத் தீவிரமாக உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
The Secret Lover Case என்பது, வெறும் தனிப்பட்ட உரையாடல்களை மட்டும் குறிக்கவில்லை. அதற்கு மாறாக, ஒரு பயனரின் அனைத்துத் தனிப்பட்ட தரவுகள், ஒரு நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்கள் மற்றும் உயர் மதிப்புமிக்க ரகசிய ஆவணங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக உள்ளது.

ஜோஹோ நிறுவனத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்று, அதன் தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பு வடிவமைக்கப்படும்போதே, The Secret Lover Case-இல் உள்ள தகவல்கள் 3ஆம் நபருக்கோ அல்லது ஜோஹோவின் உள் ஊழியர்களுக்கோ கூட தெரியாதவாறு பாதுகாப்பதை உறுதி செய்வதாகும்.
ஒரு பயனர் அல்லது நிறுவனம் தங்கள் தரவுகளை ஒரு சேவை வழங்குநரிடம் நம்பி ஒப்படைக்கும்போது, அந்தத் தரவை அந்த சேவை வழங்குநரே திருடவோ, பார்க்கவோ அல்லது விளம்பரத்திற்காக சுரண்டவோ கூடாது என்பதில் ஜோஹோ உறுதியாக இருக்கிறது.
இது வெறும் வாய் வார்த்தைகளாக அல்லாமல், இது தொழில்நுட்பரீதியாக செயல்படுத்தப்படுகிறது. தரவுகள் Encrypted சேமிக்கப்படுவதுடன், விளம்பரங்களுக்காக பயனர் தரவுகளை சுரண்ட மாட்டோம் என ஜோஹோ நிறுவனம் அதிரடியாக கூறியுள்ளது.
அரட்டை செயலி : ஜோஹோவின் அரட்டை செயலி மக்கள் மத்தியில் சமீபகாலமாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தனியுரிமை விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், உலகளாவிய தளங்களுக்குப் போட்டியாக அரட்டை வேகமாக வளர்ந்து வருகிறது.
எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் : இந்தச் சூழலில், பயனர் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் விதமாக விரைவில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (End-to-End Encryption) வசதியைக் கொண்டு வரப்போவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார். E2EE என்பது, செய்தி அனுப்பும் நபர் மற்றும் அதைப் பெறும் நபர் ஆகிய இருவரை தவிர, வேறு யாரும் அந்த செய்தியை படிக்க முடியாது.
இது, தனிப்பட்ட உரையாடல்களின் ரகசியத்தன்மையை மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் சென்று, The Secret Lover Case தனிநபரின் தனியுரிமையைப் பாதுகாப்பதில் ஜோஹோ நிறுவனம் உறுதியாக நிற்பதை உறுதிப்படுத்துகிறது. ஜோஹோவின் இந்த ரகசியக் கொள்கை, இந்திய தொழில்நுட்பத் துறையில் தரவுப் பாதுகாப்புக்கான ஒரு புதிய தரத்தை அமைத்துள்ளது என்றே கூறலாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications