ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நம்மை அதிர வைக்கிறது. மனிதர்கள் செய்யக்கூடிய பல்வேறு வேலைகளை ஏஐ தொழில்நுட்பம் வேகமாகவும் இன்னும் திறம்படவும் செய்வதாகக் கூறி நிறுவனங்கள் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணம் இருக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு மனிதர்களை மிஞ்சிவிடும், கூடிய விரைவில் ஐடி மற்றும் பிபிஓ , ஹெச்ஆர் என ஒயிட் காலர் ஜாப் என அழைக்கப்படக்கூடிய அலுவலக வேலைகள் அனைத்தும் ஏஐ தொழில்நுட்பம் வசம் சென்றுவிடும் என பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். இது ஏற்கனவே வேலைகளில் இருப்பவர்களுக்கும் கல்லூரிகளில் படித்து வரக்கூடிய மாணவர்களுக்கும் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நம்முடைய படிப்புக்கு இனி வேலை இல்லையா, ஏற்கனவே நாம் பார்த்து வரக்கூடிய வேலை நம் கையை விட்டு போகப் போகிறதா என பலரும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். இந்த சூழலில் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு பதிவு நம்முடைய அனைத்து குழப்பங்களும் ஒரு தெளிவை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கிறது.
அலுவலகம் சார்ந்த வேலைகள் முழுமையாக மனிதர்கள் வசம் இருந்து ஏஐ வசம் சென்று விடும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என தெரிவிக்கிறார். ஏஐ தொழில்நுட்பம் ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டாலும் அது அனைத்து அலுவலக வேலைகளையும் பறித்து விடும் என்ற கருத்தை நான் முழுமையாக ஏற்கவில்லை என கூறுகிறார்.
லண்டன் பொருளாதார பள்ளியின் பேராசிரியர் லூயிஸ் கேரிகோனோவின் எக்ஸ் பதிவை சுட்டிக்காட்டி ஸ்ரீதர் வேம்பு இந்த கருத்தினை தெரிவித்திருக்கிறார். அதாவது ஏஐ தொழில்நுட்பத்தால் ஒரு மின்னஞ்சலை எழுத முடியும், ஒரு தரவினை பகுப்பாய்வு செய்ய முடியும். ஆனால் சில விஷயங்களை மனிதர்களால் மட்டுமே செய்ய முடியும் என்பதால் அனைத்து அலுவலக வேலைகளையும் ஏஐ பறித்து விடும் என்ற கருத்தை நம்மால் ஏற்ல முடியாது என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அதாவது ஒரு வாடிக்கையாளிடம் பேசி ஒரு பொருளை வாங்க சம்மதிக்க வைப்பது, மனிதர்களுடன் பேசி ஒரு பிரச்சனையை தீர்ப்பது, சமாதானப்படுத்துவது இவை அனைத்துமே உணர்வுகளோடு சம்பந்தப்பட்டவை என்பதால் இதனை ஏஐ-ஆல் செய்ய முடியாது. ஒரு வேலை என்பது பல்வேறு பணிகள் கலந்த ஒரு தொகுப்பு அதில் 3 - 4 பணிகளை மட்டுமே ஏஐ செய்ய முடியும் மீதமுள்ள அனைத்திற்குமே மனித அறிவு தேவைப்படும் என லூயிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துடன் தான் ஒத்துபோவதாக தெரிவித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, ஏஐ தொடர்பான அனைத்து தகவல்களையும் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் இது இப்படி தான் நடக்கும் என இப்போதே ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள். அதே வேளையில் மாற்றங்களுக்கும் தயாராக இருங்கள் எனக் கூறியிருக்கிறார்.
ஒரு விஷயம் தெளிவாக தெரிந்துவிட்டால் யோசிப்பதோடு நிறுத்தாமல் உடனே அதற்கு ஏற்ப உங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கியிருக்கிறார். தற்போது நான் ஜோஹோ நிறுவனத்தில் ஏஐ தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் கவனமாக கேட்டு தெரிந்து கொள்கிறேன் ஆனால் இது இப்படித்தான் நடக்கும் என்ற முடிவுக்கு வரவில்லை. அதே வேளையில் குறிப்பிட்ட சில மாற்றங்களுக்கும் தயாராக இருக்கிறேன் என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications