எங்கு பார்த்தாலும் போர், வெடிகுண்டு வீச்சு, பணிநீக்கம், கொலை, கொள்ளை என நெகட்டிவான விஷயங்களாகவே நடக்கின்றன. மனிதர்களுக்கே உரிய அடிப்படை கண்ணியம், மனித நேயம் எல்லாம் மாயமாகிவிட்டதோ என நாம் நம்பிக்கை இழக்கும் போதெல்லாம் அப்படி இல்லை என்பதை உணர்த்தும் சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
அண்மையில் கூட சென்னையில் குப்பைத்தொட்டியில் கிடைத்த தங்க நகைகளை தூய்மை பணியாளர் ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து அது உரிமையாளரிடம் சேர்க்கப்பட்டது. அந்த தூய்மை பணியாளரின் நேர்மையை முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினர். இதே போன்ற ஒரு சம்பவம் தற்போது பெங்களூருவிலும் நடந்திருக்கிறது. இது சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் கவனத்தை பெற்று அவரை நெகிழ வைத்துள்ளது.

ஹர்ஸ் குப்தா மதுசூதன் என்பவர் வெளியிட்டு இருக்கக்கூடிய எக்ஸ் பதிவை ஸ்ரீதர் வேம்பு பகிர்ந்திருக்கிறார். குப்தா அண்மையில் பெங்களூருவில் ஊபர் காரில் பயணம் செய்திருக்கிறார். அப்போது தன்னுடைய பர்ஸை மறந்து காரிலேயே வைத்துவிட்டாராம். இதனை அடுத்து முக்கியமான ஒரு மீட்டிங்கில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டாராம்.
ஊபர் ஓட்டுநர் சில தூரம் சென்ற பிறகு காரின் பின்பக்க இருக்கையில் பர்ஸ் இருந்ததை பார்த்துள்ளார். இதனை அடுத்து புக்கிங் ஐடி உள்ளிட்டவற்றின் மூலம் அவரின் மொபைல் எண்ணை கண்டிபிடித்து தொடர்பு கொண்டு பர்ஸை கொண்டு சென்று குப்தாவிடமே ஒப்படைத்துள்ளார். பதிலுக்கு அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்க விரும்பினேன் ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார் பின்னர் நான் கட்டாயப்படுத்தி அதை கொடுத்தேன் எனக் கூறியிருக்கிறார்.
இந்த இளம் மனிதருக்கு நான் எப்படி நன்றி சொல்வேன் என தெரியவில்லை எனக் கூறியிருக்கும் குப்தா, அவருடைய பெயர் தொகுரு என்றும் ஊபர் இந்தியா இது போன்ற நேர்மையான ஓட்டுநர்களை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
அவருடைய இந்த பதிவினை ஸ்ரீதர் வேம்பு ஷேர் செய்துள்ளார். அதில் மனதை நெகிழ வைக்கக்கூடிய சம்பவம் எனக் கூறியிருக்கிறார். கிராமப்புறங்களில் இது போன்ற நிகழ்வுகளை நாம் அடிக்கடி பார்க்க முடிகிறது என குறிப்பிட்டு இருக்கும் அவர் இந்தியா உள்ளார்ந்த முறையில் அதிக நம்பிக்கை கொண்ட ஒரு சமூகம் எனக் கூறியிருக்கிறார். மிகவும் சவாலான பொருளாதார சூழ்நிலைகளை கொண்ட மக்கள் இன்னமும் கண்ணியத்துடன் செயல்படுகின்றனர் அவர்களை பார்த்து நான் பிரமித்து போகிறேன் எனக் கூறியிருக்கிறார். அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
எந்த வழிகளில் எல்லாம் மக்களிடம் இருந்து பணம் பறிக்கலாம் ஏமாற்றலாம் ,மோசடி செய்யலாம் என பலரும் சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கும் நிலையில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தும் நேர்மை தவறாமல் செயல்படும் மனிதர்கள் அனைவருக்கும் முன் உதாரணமாக மாறுகின்றனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications