நவீன தொழில்நுட்பங்கள் உலகம் முழுவதுமே பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறிப்பாக இன்டர்நெட் , செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகியவை நாம் தொடர்புகொள்ளும் முறையை மாற்றி விட்டன, தொழில் மேற்கொள்ளும் முறைகளை மாற்றி விட்டன.
உலகமே தற்போது இந்த புதிய தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டுதான் செயல்படுகிறது. இந்த தொழில்நுட்பங்களை நமக்கு வழங்கக்கூடியது குறிப்பிட்ட சில நிறுவனங்கள் தான். கூகுள், மெட்டா, எக்ஸ் உள்ளிட்டவை தான் சமூக வலைதளங்கள் தொடங்கி மின்னஞ்சல், மீட்டிங், டிஜிட்டல் தொழில் என அனைத்து சேவைகளையும் நமக்கு வழங்குகின்றன.

இந்த சூழலில் தான் புதிய தொழில்நுட்பங்களை நமக்கு வழங்கக்கூடிய பெரிய டெக் நிறுவனங்கள் நவீன கிழக்கிந்திய கம்பெனிகள் என சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் ஸ்ரீதர் வேம்பு, பெரிய டெக் நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளை விட அதிக பலம் பொருந்தியவையாக மாறி வருகின்றன புதிய கிழக்கிந்திய கம்பெனிகளாக இவை உருவாகின்றன என்ற வாதத்தை அவர் எழுப்பி இருக்கிறார்.
அண்மையில் தான் கூகுள் நிறுவனம் நூறாண்டு கால கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டியது. ஒரே நாளில் கூகுள் 32 பில்லியன் டாலர்களை திரட்டி இருக்கிறது. இந்திய அரசு இவ்வளவு தொகையை திரட்ட வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 100 நாட்கள் தேவைப்படும். டெக் நிறுவனங்கள் தற்போது இந்தியா போன்ற இறையாண்மை கொண்ட நாடுகளை விட அதிக பலம் பொருந்தவையாக மாறி வருகின்றன என எக்ஸ் பதிவு வெளியிடப்பட்டிருக்கிறது.
அதனை பகிர்ந்துள்ள ஸ்ரீதர் வேம்பு, பெரிய டெக் நிறுவனங்கள் பல்வேறு பெரிய நாடுகளை விட பலம் பொருந்துவையாக மாறி வருகின்றன, நவீன கிழக்கிந்திய கம்பெனிகள் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதுதான் சமூக வலைதளத்தில் பெரிய விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.
இந்தியா 200 ஆண்டுகளாக காலனி ஆதிக்கத்தின் கீழ் செல்வதற்கு முக்கிய காரணமே இந்த கிழக்கிந்திய கம்பெனி தான். தொழிலுக்காக இந்தியாவில் நுழைந்த கிழக்கிந்திய கம்பெனி நம் நாட்டில் மூலப்பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி சொந்த நாட்டிற்கு எடுத்து சென்று அங்கு பொருட்களை தயாரித்து மீண்டும் இந்தியாவிற்கே அதிக விலைக்கு விற்பனை செய்கிறது. இதன் மூலம் அதிக பலம் பொருந்தியதாக மாறிய கிழக்கந்திய கம்பெனி, இறுதியில் இந்தியாவையே கைப்பற்றி 200 ஆண்டு காலம் ஆட்சி செய்தது.
தற்போது பெரிய டெக் நிறுவனங்களும் இதே போன்ற ஒரு நிலைக்கு தான் மாறி வருகின்றன என்பதையே ஸ்ரீதர் வேம்புவின் பதிவு நமக்கு குறிப்பிடுகிறது. அதாவது இந்தியர்களின் தரவுகளையும் இந்தியர்களின் திறமைகளையும் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் எடுத்து பயன்படுத்திக் கொள்கின்றன. அதற்கு பதிலாக இவற்றின் மூலம் தயாரிக்க கூடிய மென்பொருட்களையும், புதிய தொழில்நுட்பங்களையும் இந்தியர்களுக்கு விற்பனை செய்கின்றன. இது ஒரு வகையான டிஜிட்டல் காலனி ஆதிக்கம் என வரையறை செய்யப்படுகிறது.
இதை தான் ஸ்ரீதர் வேம்பவும் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வருகிறார். ஒரு நாடு சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றால் அந்த நாட்டு மக்கள் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பமும் அந்த நாட்டின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்பதே பல்வேறு தொழில் நிபுணர்கள் முன்வைக்கக்கூடிய வாதம். ஆனால் தற்போது இந்தியாவில் நிலைமை என்ன, வெளிநாட்டு மென் பொருட்களை அதிகமாக நம்பி இருக்கிறது. எனவே தான் இது ஒரு நவீன காலனி ஆதிக்கம் என வரையறை செய்யப்படுகிறது.
எனவே தான் இந்தியா தனது சொந்த மென்பொருட்களையும் வன்பொருட்களையும் உருவாக்க வேண்டும், புதிய கிழக்கு இந்திய நிறுவனங்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என குரல் கொடுக்கப்படுகிறது. வெளிநாட்டு தொழில்நுட்பங்களை சார்ந்து இருப்பதை நிறுத்திவிட்டு நமக்கு தேவையான தொழில்நுட்பங்களை நாமே உருவாக்க வேண்டும் என்பதே அவர் கூறக்கூடிய கருத்து.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications