இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட்டு சாதனைப்படைத்த முதல் ஸ்டார்ட்அப் நிறுவனமாக இருக்கும் சோமேட்டோ, செலவுகளைக் குறைக்கும் விதமாக 2022 ஆம் ஆண்டிலேயே அதிகப்படியான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.
இந்த நிலையில் நிறுவன மறுசீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இதன் ஒரு பகுதியாகச் சோமேட்டோ-வில் மிகவும் பிரபலமான சேவையாக விளங்கும் 10 நிமிட இன்ஸ்டென்ட் டெலிவரி சேவையை நிறுத்த உள்ளதாகத் தகவல் வெளியானது.
சோமேட்டோ தொடர்ந்து லாபத்தில் வைத்திருக்கவும், கடுமையான வர்த்தகச் சூழ்நிலையைச் சமாளிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதலில் தகவல் வெளியாகினாலும், அடுத்த சில மணிநேரத்தில் சோமேட்டோ தனது முடிவில் அந்தர் பல்டி அடித்துள்ளது.
சோமோட்டோ
சோமோட்டோ தனது வர்த்தகத்தை நாட்டின் 2வது மற்றும் 3வது தர நகரங்களில் வேகமாக விரிவாக்கம் செய்து வரும் வேளையில் அதிகப்படியான முதலீட்டை செய்து வருகிறது, இதனால் லாப அளவுகளைத் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் வைப்பது கடுமையான சுமையாக உள்ளது.
10 நிமிட இன்ஸ்டென்ட் டெலிவரி
இதற்கிடையில் தான் அதிகச் செலவுகளை ஏற்படுத்தும் அல்லது போதுமான லாபத்தை அளிக்காத சேவைகளை நிறுத்த முடிவு செய்து வருகிறது. இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு சோமேட்டோ தனது உணவக பார்ட்னர்களிடம் 10 நிமிட இன்ஸ்டென்ட் டெலிவரி சேவையை நிறுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டதாகத் தகவல் வெளியானது.
லாபம்
இந்த இன்ஸ்டென்ட் சேவை மூலம் லாபம் பார்க்க முடியவில்லை என்றும், நிறுவனம் போதுமான் ஆர்டர்கள் இதில் கிடைக்கவில்லை என்றும், இப்பிரிவு மூலம் கிடைக்கும் வருமானம் இதன் கட்டமைப்புக்குக் கூடப் போதுமானதாக இல்லை, இதனால் இதை விரிவாக்கம் செய்ய முடியாது எனச் சோமேட்டோ தரப்பில் இருந்து தகவல் வெளியானது.
சோமேட்டோ விளக்கம்
இந்த விஷயம் நாடு முழுவதும் பெரியதாக வெடித்த நிலையில், சோமேட்டோ நேரடியாக விளக்கம் கொடுத்துள்ளது. இதில் இன்ஸ்டென்ட் சேவை நிறுத்தப்படப்போவது இல்லை, தற்போது எங்களுடைய உணவக பார்ட்னர்களிடம் இருந்து புதிய மெனு, இப்பிரிவு வர்த்தகத்தை மொத்தமாக ரீபிராண்டிங் செய்யத் திட்டமிட்டு வருகிறோம்.
ஊழியர்களுக்குப் பாதிப்பு இல்லை
அனைத்து இன்ஸ்டென்ட் சேவைக்கான பினிஷிங் ஸ்டேஷன் அப்படியே இருக்கும், இதனால் எந்த ஊழியர்களுக்கும் பாதிப்பு இல்லை என்று சோமேட்டோ தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அடுத்தச் சில மாதத்தில் இந்த இன்ஸ்டென்ட் சேவை அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 2022ல் அறிமுகம்
சோமேட்டோ தனது 10 நிமிட இன்ஸ்டென்ட் டெலிவரி சேவை திட்டத்தை மார்ச் 2022ல் பெரிய சர்ச்சைக்கு மத்தியில் அறிமுகம் செய்தது. இந்தச் சேவை பெரு நகரங்களில் அதிலும் குறிப்பாக மக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே அளிக்கப்படுகிறது.
Low Value Order திட்டம்
இதேவேளையில் சோமேட்டோ தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யக் குறைந்த விலையில் தாலி அல்லது மீல்ஸ் அல்லது காம்போ உணவுகளை விற்பனை செய்யும் புதிய திட்டத்தில் களமிறங்கியுள்ளது. இதன் மூலம் Low Value Order பிரிவில் அதிகப்படியான ஆர்டர் பெற முடியும்.
சோமேட்டோ திட்டம் என்ன..?
இந்தக் காம்மோ மீல்ஸ்-ஐ 10 நிமிட டெலிவரியில் கொண்டு வர போகிறதா அல்லது தனிப்பட்ட முறையில் 10 நிமிட டெலிவரி இயங்குமா..? அல்லது புதிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாமல் இந்த இன்ஸ்டென்ட் சேவையை மொத்தமாகக் கைவிடுமா..?
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications