பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ (Zomato) தங்களுடைய செயலியில் குரூப் ஆர்டர்களுக்காக புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. சோமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தீபிந்தர் கோயல் இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதன்படி சோமேட்டோ செயலியில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய அம்சத்தின் மூலம் ஒரே ஆர்டரில் பலர் தங்களுக்கு விருப்பமான உணவினை ஆர்டர் செய்து கொள்ள முடியும் என கூறியுள்ளார்.

இதன் மூலம் ஒரு பயனாளர் ஒரு லிங்கை உருவாக்கி தன்னுடைய நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்தால் போதும் அவர்களுக்கு பிடித்த உணவுகளை நேரடியாக அந்த லிங்க் உடன் தொடர்புடைய கார்ட்டில் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் குழுவாக உணவு ஆர்டர் செய்யும் நடைமுறை என்பது மிகவும் எளிதாகிவிடும் என சோமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வேகமாகவும் எளிமையாகவும் அவரவருக்கு பிடித்த உணவினை ஒரே ஆர்டரின் கீழ் கொண்டுவர முடியும். தற்போதைக்கு குறிப்பிட்ட சாதனங்களுக்கு மட்டுமே இந்த நவீன அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அனைத்து சோமேட்டோ வாடிக்கையாளர்களும் இதனை பயன்படுத்த முடியும் என்றும் தீபிந்தர் கோயல் தன்னுடைய எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
சோமேட்டோ பயனாளர்கள் இந்த குரூப் ஆர்டரின் முறையை பயன்படுத்திவிட்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் எனவும் அதற்கேற்ற வகையில் அதில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த குரூப் ஆர்டரின் அம்சத்தை பயன்படுத்துவதற்கு முதலில் ஒரு நபர் உணவு ஆர்டர் செய்வதற்கான லிங்கினை தொடங்க வேண்டும். அதாவது அவருக்கு பிடித்த ஒரு உணவகத்தில் அவருக்கு பிடித்த உணவினை ஒரு கார்ட்டில் சேர்த்து விட்டு அந்த லிங்கை தன்னுடைய நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் அந்த லிங்கனை கிளிக் செய்தால் அவர்களுக்கு தேவையான மெனு அதில் காண்பிக்கும் அதன் அடிப்படையில் அவர்களுக்கு பிடித்த உணவினை அதே கார்ட்டில் சேர்க்கலாம். எனவே அனைவரது விருப்பமான உணவுகளும் அதில் சேர்க்கப்பட்டவுடன் முதலில் இந்த லிங்கை தொடங்கியவர் அதனை சரி பார்த்துவிட்டு பணத்தை செலுத்தி விட்டால் ஆர்டர் டெலிவரி செய்யப்படும். வீட்டில் பார்ட்டி நடத்துவது அல்லது அலுவலகத்தில் அல்லது நண்பர்கள் கெட் டூ கெதர் போன்ற நிகழ்வுகளில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications