சோமேட்டோ - Blinkit இணைப்பு.. இனி யாராலும் அசைக்க முடியாது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ ஐபிஓ வெளியிட்ட பின்பு அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வந்த நிலையில், மத்திய அரசின் புதிய வரி விதிப்பு, வர்த்தக மாற்றங்கள் மறு சீரமைப்பு மற்றும் சில உயர் அதிகாரிகள் வெளியேற்றம் ஆகியவற்றின் மூலம் தடுமாற்றம் அடைந்து வந்தது.

3 மாத சம்பளத்துடன் சண்டை போட ரெடியா? டெஸ்லா ஊழியர்களுக்கு எலன் மாஸ்க் சூப்பர் அறிவிப்பு!!!3 மாத சம்பளத்துடன் சண்டை போட ரெடியா? டெஸ்லா ஊழியர்களுக்கு எலன் மாஸ்க் சூப்பர் அறிவிப்பு!!!

ஆனால் வர்த்தக விரிவாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வந்தாலும் சக போட்டி நிறுவனங்கள் மத்தியில் போட்டி அதிகரித்துள்ள நிலையில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு தனது ஆதிக்கத்தை மீண்டும் ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் உறுதி செய்துள்ளது.

 சோமேட்டோ

சோமேட்டோ

ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ பல முறை க்ரோபர்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்ற முயற்சி செய்து தோல்வி அடைந்த நிலையில் சோமேட்டோ சிறிய அளவிலான பங்குகளை முதலீடு செய்து கைப்பற்றிய நிலையில், சமீபத்தில் 100 மில்லியன் டாலர் அளவிலான நிதியுதவி செய்தது.

 சோமேட்டோ - Blinkit

சோமேட்டோ - Blinkit

இந்நிலையில் சோமேட்டோ இன்று Blinkit (முன்பு க்ரோபரஸ்) நிறுவனத்தை இணைக்க ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் Blinkit சுமார் 700 மில்லியன் டாலர் அளவில் மதிப்பிடப்பட்டுப் பணத்திற்குப் பதிலாகப் பங்குகளைப் பரிமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

 பங்கு பரிமாற்றம்

பங்கு பரிமாற்றம்

இதன் மூலம் Blinkit நிறுவனத்தின் பங்கு உரிமையாளர்கள் அனைவரும் சோமேட்டோ பங்குகளைப் பெற உள்ளனர். இதன் மூலம் Blinkit நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த சாப்ட்பேங்க், அலிபாபா போன்ற பல வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள சோமேட்டோ நிறுவனப் பங்குகளைப் பெற உள்ளனர்.

சாப்ட்பேங்க்

சாப்ட்பேங்க்

உதாரணமாக Blinkit நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள ஜப்பான் சாப்ட்பேங்க் சுமார் 4 சதவீத சோமேட்டோ பங்குகளைப் பெற வாய்ப்பு உள்ளது. மேலும் சோமேட்டோ நிறுவனம் Blinkit நிறுவனத்தை இணைக்க Competition Commission of India அமைப்பிடம் ஒப்புதல் பெற்ற பின்னர் இணைக்கப்பட உள்ளது.

 போட்டி அதிகரிப்பு

போட்டி அதிகரிப்பு

குவிக் டெலிவரி சேவை துறையில் பல நிறுவனங்கள் வந்துள்ள காரணத்தால் Blinkit நிறுவனத்தால் தனது வர்த்தகத்தைத் தாக்கு பிடிக்க முடியாத காரணத்தால் ஊழியர்கள் பணிநீக்கம், வர்த்தகம் குறைவாக இருக்கும் இடத்தில் கடைகள் மூடல், சப்ளையர்களுக்குத் தாமதமான பேமெண்ட் போன்ற பல பிரச்சனைகளைச் சந்தித்தது. இதைச் சமாளிக்கவே 100 மில்லயன் டாலர் அளவிலான கடனை பெற்றது.

 ஸ்விக்கி - சோமேட்டோ

ஸ்விக்கி - சோமேட்டோ

சோமேட்டோ நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான ஸ்விக்கி சொந்தமாக உணவு டெலிவரி சேவையைத் தாண்டி குவிக் டெலிவரி சேவையை வைத்துள்ள நிலையில், Blinkit நிறுவனத்தைக் கைப்பற்றிய பின்பு தனது தளத்தில் சோமேட்டோவும் குவிக் டெலிவரி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Zomato-Blinkit sign deal for merger with stock swap option, Swiggy may feel the heat

Zomato-Blinkit sign deal for merger with stock swap option, Swiggy may feel the heat சோமேட்டோ - Blinkit இணைப்பு.. இனி யாராலும் அசைக்க முடியாது..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X