District ஆப்-க்கு உயிர் கொடுத்த சோமேட்டோ.. பேடிஎம் டிக்கெட்டிங் பிசினஸை ரூ.2,048 கோடிக்கு வாங்கியது!

பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ, பேடிஎம்-ன் திரைப்படம் டிக்கெட் மற்றும் பிற நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை பிசினஸை சுமார் ரூ.2,048 கோடி மதிப்புக்கு மொத்தமாகப் பணமாகக் கொடுத்து வாங்க உள்ளதாக இரு நிறுவனங்களும் வியாழக்கிழமை பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் (OCL) நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு ஆன்லைன் பேமெண்ட் பிராண்டான பேடிஎம்-ஐ நிர்வாகம் செய்து வருகிறது.

சோமேட்டோ ஆரம்பம் முதல் மக்கள் வீட்டிலேயே பல தரப்பட்ட சேவைகளைப் பெறுவதற்காக பணியாற்றியது, குறிப்பாக ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட உணவை ஹோம் டெலிவரி, பிளிங்கிட் வாங்கிய பின்பு மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை ஹோம் டெலிவரி செய்வதில் அதிகமாக ஈடுபட்டு இருந்தது. இந்த நிலையில் சோமேட்டோ மக்களை வீட்டில் இருந்து வெளியே அழைத்துச் செல்லும் வர்த்தகத்தில் கவனம் செலுத்த முடிவு செய்து கோயிங் அவுட் பிரிவு சார்ந்த வர்த்தகத்தையும், சேவைகளையும் உருவாக்கத் துவங்கியது.

District ஆப்-க்கு உயிர் கொடுத்த சோமேட்டோ.. பேடிஎம் டிக்கெட்டிங் பிசினஸை ரூ.2,048 கோடிக்கு வாங்கியது!

2022 இல் பிளிங்கிட் கையகப்படுத்தியதன் மூலம் குவிக் காமர்ஸ் பிரிவில் நுழைந்த பின்பு சோமேட்டோ-விடம் ரூ.12,539 கோடி மதிப்பிலான பண இருப்பு உள்ளது. இதை சிறப்பான முறையில் பயன்படுத்தும் நோக்குடன் அதன் நீண்ட கால திட்டமான Going Out பிஸ்னஸ்-ல் பெரும் தொகையை முதலீடு செய்ய முடிவு செய்து தற்போது பேடிஎம்-ன் திரைப்படம் டிக்கெட் மற்றும் பிற நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை பிசினஸை பணமாகக் கொடுத்து வாங்கியுள்ளது.

சோமேட்டோ பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில்,"இந்த கையகப்படுத்துதல் எங்களின் கோயிங் அவுட் வணிகத்தில் முதலீடு செய்யும் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கு ஏற்ப அமைந்துள்ளது." என்று தெரிவித்துள்ளது.

சோமேட்டோ-வின் உணவு டெலிவரி வணிகம் நிலையான அல்லது பெரிய மாற்றம் இல்லாத வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டு இருக்கும் வேளையில், குவிக் காமர்ஸ் தடாலடியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனாலும் எதிர்காலத்திற்கும், அடுத்தகட்ட சோமேட்டோ வளர்ச்சிக்கும் தூணாக இந்த கோயிங் அவுட் டிக்கெட்டிங் பிஸ்னஸ் பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி சோமேட்டோ, கோயிங் அவுட் வணிகத்திற்காக 'டிஸ்ட்ரிக்ட்' என்ற செயலியை அறிமுகப்படுத்தும் என்று கூறியது, இது உணவு டெலிவரி மற்றும் குவிக் காமர்ஸ் க்குப் பிறகு நிறுவனத்தின் மூன்றாவது பெரிய வணிக-பிரிவாக மாறும் என்று கூறியது.

சோமேட்டோ - ஓன்97 கம்யூனிகேஷன்ஸ் மத்தியிலான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, OCL முதலில் தனது எண்டர்டெயின்மென்ட் டிக்கெட்டிங் வணிகத்தை அதன் கிளை நிறுவனமான Orbgen technologies மற்றும் wasteland entertainment ஆகியவற்றுக்கு மாற்றும். இதன் பின்பு இறுதியாக இரண்டு துணை நிறுவனங்களிலும் உள்ள முழு பங்குகளும் சோமேட்டோவுக்கு மாற்றப்படும் என பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது ஓன்97 கம்யூனிகேஷன்ஸ்.

இந்த மாற்றத்தில் டிக்கெட்டிங் வணிகத்தில் பணியாற்றும் 280 ஊழியர்களும் சோமேட்டோவுக்கு மாற்றப்படுவார்கள். ஓன்97 கம்யூனிகேஷன்ஸ் தனது டிக்கெட்டிங் சேவைகள் அடுத்த 12 மாதங்களுக்கு பேடிஎம் ஆப்பில் தொடர்ந்து கிடைக்கும், அதன் பயனாளர்கள் மற்றும் வணிக கூட்டாளர்களுக்கு தடையற்ற அனுபவத்தை உறுதி செய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் சோமேட்டோவின் வெளியே செல்லும் வணிகம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.1,268 கோடி மத்தியிலான மொத்த விற்பனையைப் பதிவு செய்தது, இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 106% அதிகரித்துள்ளது. தற்போது டிக்கெட்டிங் வர்த்தகத்தை பேடிஎம் நிறுவனத்திடம் இருந்து பெற்ற நிலையில், இப்பிரிவின் வளர்ச்சி மிகப்பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையைத் தளமாகக் கொண்ட BookMyShow தான் டிக்கெட்டிங் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+