சென்னை: இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான Zomato தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, பேடிஎம் நிறுவனத்தின் திரைப்படம் மற்றும் டிக்கெட் வர்த்தக பிரிவை மொத்தமாக வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு வருடமாக ஒழுங்குமுறை நடவடிக்கைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த பேடிஎம் நிறுவனம் சமீபத்தில் சாம்சாங் வேலெட் உடனான ஒப்பந்தம் மூலம் இந்நிறுவனப் பங்குகள் அதிகளவில் உயர்ந்தது.

இதேவேளையில் பேடிஎம் தனது நிறுவன கட்டமைப்பை எளிதாக்குவது மட்டும் அல்லாமல் தீவிரமான மறுசீரமைப்பில் இறங்கி செலவுகளைக் கட்டுப்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக பேடிஎம் தற்போது திரைப்படம் மற்றும் டிக்கெட் வர்த்தக பிரிவை விற்பனை செய்யும் முடிவில் இறங்கியுள்ளது.
இதுகுறித்து சோமேட்டோ நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில்,"பேடிஎம் நிறுவனத்துடன் சில பிரிவு வர்த்தகத்தைக் கைப்பற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பதை அதிகாரப்பூர்வமாகப் பங்குச்சந்தைக்கும், முதலீட்டாளர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இருப்பினும், இதுவரை எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. இரு நிறுவனங்கள் மத்தியிலான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் சட்ட ஒப்புதல்கள், இயக்குநர்கள் குழு ஒப்புதல் மற்றும் அதைத் தொடர்ந்து இணைப்பு பணிகள் நடக்கும்." என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பேடிஎம் நிறுவனத்தின் திரைப்படம் டிக்கெட் புக்கிங் மற்றும் ஈவென்ட் டிக்கெட் பிரிவை Zomato வாங்குவது மூலம் வர்த்தக சந்தையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வர வாய்ப்பு உள்ளது. இந்த ஒப்பந்தத்தில், பேடிஎம் நிறுவனத்தின் இப்பிரிவின் ரூ.1,600 முதல் ரூ.1,750 கோடி வரை மதிப்பீடு செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதோடு திரையரங்குகளிடம் இருந்து கிடைக்கும் தொகையுடன் சேர்த்துக் கணக்கிட்டால் இப்பிரிவின் மதிப்பு ரூ.2,000 கோடி வரை உயரக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சோமேட்டோ தற்போது மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது மட்டும் அல்லாமல் பிற சேவைகள் இணைப்பு மற்றும் விரிவாக்கத்திலும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு முக்கியமான உதாரணம் Blinkit.
சோமேட்டோ நிறுவனம் பேடிஎம்-ன் இந்த பரிவர்த்தனை நிறைவடைந்தால் இதன் மிகப்பெரிய வர்த்தக கைப்பற்றல்களில் ஒன்றாக இருக்கும். சோமேட்டோ நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் உபர் ஈட்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது, அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டில் பங்கு கைமாற்றம் மூலம் ரூ.4,447 கோடி மதிப்பில் குவிக் காமர்ஸ் தளமான ப்ளிங்கிட் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது.
இதற்கு அடுத்தபடியாக Zomato நிறுவனத்தின் மிகப்பெரிய கையகப்படுத்தல்களில் பேடிஎம் நிறுவனத்தின் திரைப்படம் டிக்கெட் புக்கிங் மற்றும் ஈவென்ட் டிக்கெட் பிரிவு இருக்கும்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications