நாடு முழுவதும் மே 12 ஆம் தேதியன்று அன்னையர் தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. எல்லாரும் தங்களது அன்னையரின் அளப்பரிய தியாகத்தையும் அன்பையும் பாராட்டி போற்றினர். இந்த நல்ல நாளில் சோமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தனது நிறுவன ஊழியர்களுக்கு ஆச்சரியம் தரும் வகையில் அவர்களது அன்னையர்களுக்கு ஒரு அழைப்பு விடுத்தார்.
ஊழியர்களின் அன்னையரை அலுவலகத்துக்கு வரவழைத்து கௌரவித்தார்.

அன்றைய தினம் ஊழியர்களுடன் சேர்ந்து அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. சோமாட்டோவை இன்னும் சிறப்பாக எப்படி வழிநடத்துவது என்பது பற்றிய அறிவுரைகளும் அன்னையரிமிருந்து பெறப்பட்டது. எங்கும் அன்பும் பாசமும் நிறைந்திருந்தது. இந்த நிகழ்ச்சியின் படங்கள் மற்றும் விடியோக்களை தீபிந்தர் கோயல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
ஒரு விடியோவில் ஒரு பெண் கேக் வெட்டுவதையும் அவரைச் சுற்றி நிறைய பெண்கள் இருக்கும் காட்சியும் இதில் இடம் பெற்றிருந்தது. கோயல் தனது ஊழியர்கள் மற்றும் அவர்களது தாயார்களுடன் சேர்ந்து படம் எடுத்துக் கொண்டார். மற்றொரு பதிவில் ஊழியர்களின் அன்னையர் வடிவமைத்திருந்த கலைப் பொருளை பதிவிட்டிருந்தார். இந்த பதிவுகள் சமூக தலத்தில் வைரலாகியது.
உண்மையிலேயே நல்ல ஒரு விஷயம் என்று ஒரு பதிவர் பதிவிட்டிருந்தார்.
மற்றொருவர் தீபிந்தர் இது நல்ல விஷயம். ஒவ்வொரு தாயும் இதை நினைத்து எப்படி மகிழ்ந்திருப்பார்கள் என்று அளவிட்டுக் கூற முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.
சோமாட்டோ தனது ஊழியர்களுக்காக செய்யும் இதுபோன்ற செயல்களால், நீண்ட காலமாக ஒரு நிறுவனமாக தங்கள் கலாசாரத்தை செயல்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் சரியான செயல்முறையின் பிரதிபலிப்பாகும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
சோமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயலின் இந்த செயல் சோமாட்டோ ஊழியர்கள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அர்ப்பணிப்புடன் தங்களது நிறுவனத்துக்கு பணியாற்ற வேண்டும் என்று இந்த செயல் மூலம் உணர்ந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்த வருடம் அன்னையர் தினத்தில் தங்களது நிறுவனத்தில் வைத்து அன்னையருடன் சேர்ந்த கொண்டாடி மகிழ்ந்தது தங்களது வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு சம்பவம் என்று உணர்ச்சிவயப்பட்டனர்.
அன்னையர் தினத்தை இந்த ஆண்டு தனது ஊழியர்களின் தாயார்களுடன கொண்டாடி மகிழ்ந்தது தனக்கும் ஒரு இனிய அனுபவமாக இருந்ததாக சோமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் பரவசத்துடன் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications