இந்திய பெரு நகரங்களில் உணவு மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி சேவை பிரிவில் பணியாற்றும் பெரும்பாலான இளைஞர்கள் படித்த பட்டதாரிகள் தான், கனவு தேடி ஓடிக்கொண்டு இருக்கும் இளைஞர்கள், பிடித்த வேலை அல்லது படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரையில் பகுதி நேரமாக உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்கின்றனர்.
இப்படி விக்னேஷ் என்ற இளைஞன் சோமேட்டோ டெலிவரி பார்ட்னராக பணியாற்றி வந்த இதே வேளையில் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் வேலைவாய்ப்புகளுக்கு பொது தேர்வு வைத்து அதன் மூலம் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக சோமேட்டோ தெரிவித்துள்ளது.

விக்னேஷ்-ன் வெற்றி அவரையும் அவருடைய குடும்பத்தையும் மட்டும் அல்லாமல் சோமேட்டோ நிறுவனத்தையும் கவர்ந்துள்ளது. விக்னேஷ்-ன் வெற்றியை கொண்டாடும் வகையில் சோமேட்டோ தனது டிவிட்டர் அதாவது X தளத்தில் விக்னேஷ் மற்றும் அவருடைய குடும்பத்துடன் இருக்கும் போட்டோ-வை பகிர்ந்தது.
இதற்காக சோமேட்டோ டெலிவரி பார்ட்னராக இருந்து ராஜினாமா செய்யும் போது இப்படி ராஜினாமா செய்ய வேண்டும் என X தளத்தில் தெரிவித்துள்ளது. இதற்கு விக்னேஷ் முக்கியமான திருத்தம் மற்றும் விளக்கத்தை கொடுத்துள்ளார்.
இந்த பதிவு போட்ட அடுத்த சில நிமிடத்தில் ஒட்டுமொத்த இந்திய மக்களும் அவரை பாராட்டி வருகிறது. சோமேட்டோ விக்னேஷ்-ஐ பாராட்டில் ஜூன் 24 ஆம் தேதி X தளத்தில் போட்டோவை பகிர்ந்த நிலையில் சுமார் 1,10,000 பேர் இந்த பதிவை பார்த்துள்ளனர், 265 ரீடிவீட், 4235 லைக் என அசத்தி டிரெண்டாகி வந்த நிலையில் விக்னேஷ் முக்கிய திருத்தம் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஜூலை 25 ஆம் தேதி விக்னேஷ் X தளத்தில் சோமேட்டோ-வை டேக் செய்து தான் TNPSC தேர்வில் வெற்றிப்பெறவில்லை நியூ இந்தியா அசூரென்ஸ் நிறுவனத்தின் AO எனப்படும் நிர்வாக அதிகாரி தேர்வில் தான் தான் தேர்ச்சிபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். விக்னேஷ்-ன் பதிவையும் இதுவரையில் 1600 பேர் பார்த்துள்ளனர். இதை சோமேட்டோ இதுவரையில் தனது பதிவில் திருத்தவில்லை.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!



Click it and Unblock the Notifications