டெல்லியில் ரூ.79 கோடிக்கு பிளாட் வாங்கிய சோமாட்டோ சிஇஓ .. இவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..!

டெல்லி: சோமாட்டோவின் சிஇஓ தீபிந்திர் கோயல் அண்மையில் டெல்லியின் அருகே உள்ள மெஹ்ராவ்லி தாசிலில் 5 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உள்ள இந்த நிலத்தின் மதிப்பு ரூ.79 கோடியாகும்.

இதற்கு முத்திரைக் கட்டணமாக ரூ.5.24 கோடியை கோயல் செலுத்தியுள்ளார். இதன் ஒரு பகுதி 2023 மார்ச் 28 ஆம் தேதியன்று லக்ஸாலன் பில்டிங் பிரைவேட் லிமிடெட்டிடமிருந்து ரூ.29 கோடிக்கு வாங்கினார். அதற்கு முத்திரைக் கட்டணம் ரூ.1.74 கோடி ஆகும். பின்னர் ரவி கபூர் என்பவரிடமிருந்து 2.53 ஏக்கர் நிலத்தை ரூ.50 கோடிக்கு தீபிந்தர் கோயல் விலைக்கு வாங்கினார். இதற்கு முத்திரைக் கட்டணம் ரூ.3.5 கோடி ஆகும்.

டெல்லியில் ரூ.79 கோடிக்கு பிளாட் வாங்கிய சோமாட்டோ சிஇஓ .. இவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..!

டெல்லியின் சத்தார்பூர் பகுதியில் உள்ள தேரா மண்டி கிராமத்தில் இந்த நிலங்கள் உள்ளன. பத்திரப் பதிவு ஹாஸ் காஸ் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதுபற்றி சோமாட்டோ தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை. விற்றவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

டெல்லி - என்சிஆர் பகுதிகளில் அண்மைக்காலமாக நிறைய ரியல் எஸ்டேட் டீல்கள் நடைபெறுகின்றன. மேக்மை டிரிப் குரூப்பின் சிஇஓ ராஜேஸ் மாகோவ் குருகிராமில் உள்ள டிஎல்எப் மேக்நோலியாஸ் குடியிருப்பில் ஒரு அப்பார்ட்மென்ட்டை வாங்கினார்.

6428 சதுர அடி பரப்பளவு உள்ள இந்த அப்பார்ட்மென்டின் மதிப்பு ரூ.33 கோடி ஆகும்.
அதேபோல் ஜென்பாக்ட் தலைமை ஹெச் ஆர் அதிகாரி பியூஷ் மேத்தா அதே காம்ப்ளக்சில் 6462 சதுர அடியுள்ள பிளாட்டை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.32.60 கோடி ஆகும். முத்திரைக் கட்டணமாக பியூஷ் மேத்தா ரூ.1.95 கோடியை செலுத்தியுள்ளார்.

தீபிந்தர் இளமைக்காலம்:
பஞ்சாப் மாநிலம் முக்த்சரில் தீபிந்தர் கோயல் பிறந்தார். அவர் சண்டீகரில் உள்ள டீஏவி கல்லூரியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் 2001 இல் தில்லியில் உள்ள ஐஐடியில் சேர்ந்து 2005 இல் பட்டம் பெற்றார். கணிதம் மற்றும் கணினியில் பிடெக் பட்டம் பெற்றார்.

சோமாட்டோ தொடக்கம்:
இந்தியாவில் உணவு டெலிவரி துறையில் தீபிந்தர் கோயல் ஆர்வமாக இருந்துள்ளார்.
பெய்னில் அவர் பணியாற்றிய காலத்தில் சோமாட்டோ பற்றிய சிந்தனை தோன்றியது. அங்கு அவர் உணவகங்களில் இருந்து உணவை ஆர்டர் செய்வதில் உள்ள சிக்கல்களுடன் சக ஊழியர்கள் போராடுவதைக் கண்டார். விரிவான உணவகத் தகவலை வழங்கும் ஆன்லைன் தளத்தின் அவசியத்தை உணர்ந்து, கோயல், சக ஊழியரான பங்கஜ் சத்தாவுடன் இணைந்து Foodiebay.com ஐ 2008 இல் தொடங்கினார். 2010 ஆம் ஆண்டில், இந்த தளம் Zomato.com என மறுபெயரிடப்பட்டது, விரைவாக மக்களிடையே பரவலான அங்கீகாரத்தைப் பெற்றது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டிசம்பர் 31ல் மட்டும் இந்திய வாடிக்கையாளர்கள் கூட்டாக டெலிவரி பார்ட்னர்களுக்கு 97 லட்ச ரூபாய்க்கு மேல் டிப்ஸ் செய்ததாக சமூக தளங்களில் பதிவிட்டார்.

சொத்துக்கள்:
தீபிந்தர் கோயல் தில்லியின் தேரா மண்டி கிராமத்தில் 79 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஏக்கர் நிலத்தை வைத்திருக்கிறார். கூடுதலாக, கோயலுக்கு ரூ.4.76 கோடி மதிப்புள்ள ஃபெராரி ரோமா, ரூ.3.35 கோடி விலையுள்ள போர்ஷே 911 டர்போ, ரூ.4.18 கோடி மதிப்புள்ள லம்போர்கினி உருஸ் உள்ளிட்ட சொகுசு வாகனங்கள் உள்ளன.

நிகர மதிப்பு:
சோமாட்டோவின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ தீபிந்தர் கோயலின் நிகர மதிப்பு ரூ.2570 கோடியாக உள்ளது. சோமாட்டோவில் 5.5% பங்குகளை வைத்திருக்கும் கோயல், Bira 91, HyperTrack, TerraDo மற்றும் SquadStrack உள்ளிட்ட பல்வேறு ஸ்டார்ட்அப்களில் தனது முதலீடுகளை செய்துள்ளார்.

Story written by: Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+