Zomato தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல், நிறுவனத்தின் தலைமைப் பணியாளர் பதவிக்கான வேலை வாய்ப்பை அறிவித்துள்ளார். அதன்படி, இந்த வேலைக்கு ஒரு குறிப்பிடதக்க நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, வேலையில் சேர விரும்புவோருக்கு முதல் ஆண்டில் சம்பளம் இல்லை என்றும், பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர் ரூ.20 லட்சத்தை கட்டணமாக செலுத்த வேண்டும் என்று விசித்திரமான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக வளைதலத்தில் பதிவிட்டுள்ள தீபிந்தர் கோயல், சிறந்த குணங்கள் கொண்ட தலைமைப் பணியாளர்களை தேடுவதாகவும், அந்த சிறந்த பணியாளர் வேலையில் முழு ஈடுபாட்டுடனும், வேலையில் மிகுந்த ஆர்வத்துடனும் இருக்க வேண்டும் என்றும் தாழ்வு மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தகுதி இல்லாவிட்டாலும், கற்றுக்கொள்வதற்கான வலுவான விருப்பத்துடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் முதல் ஆண்டில் சம்பளம் வழங்கப்படாது மற்றும் ரூ.20 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். அதே காலகட்டத்தில், அந்த பணியாளர் விரும்பும் தொண்டு நிறுவனத்திற்கு ஜோமாட்டோ ரூ.50 லட்சத்தை அளிக்கும். இரண்டாம் ஆண்டு முதல், தலைமைப் பணியாளர்கள் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெறுவார் என்று கூறியுள்ளார்.
நான் எனக்காக ஒரு தலைமைப் பணியாளரைத் தேடுகிறேன். எனவே, இது போன்ற வேலை, வழக்கமான சலுகைகளுடன் இருக்கும் வேலை கிடையாது. பெரும்பாலான மக்களுக்கு இந்த வேலையை நாங்கள் விரும்பத்தகாததாக ஆக்குகிறோம். எனவே இந்த வேலைக்கு முதல் ஆண்டில் சம்பளம் கிடையாது. தேர்ந்தெடுக்கப்படும் நபர் ரூ.20 லட்சத்தை வழங்கவேண்டும். இது 100% நன்கொடையாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், நல்ல ஊதியம் பெறும் வேலைக்காக அல்லாமல், நீங்கள் ஈர்க்க விரும்பும் நபர்களின் முன் உங்களை அழகாகக் காட்டுவதற்குப் பதிலாக, அது வழங்கும் கற்றல் வாய்ப்பிற்காக இதைச் செய்ய வேண்டும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்கள் சோமாட்டோவின் உயர் தாக்கத் திட்டங்களான Blinkit, Hyperpure மற்றும் Feeding India ஆகியவற்றில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கும். இது ஒரு அதிவேக கற்றல் அனுபவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முதன்மையான எம்பிஏ திட்டத்தின் மதிப்பையும் பிரதிபலிக்கிறது.
தனிப்பட்ட முறையில் தொழில் ரீதியாக பணியாளர்கள் இந்த வேலையில் வெற்றி பெற்றாலும் இல்லாவிட்டாலும் ஒரு விரைவான கற்றல் திட்டமாக நினைத்து பார்க்க வேண்டும் என்று கோயல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் 200 வார்த்தைகள் கொண்ட கவர் கடிதத்தை நேரடியாக தனக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இதில் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு செயல்முறை கடிதத்தின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கத்திற்கு மாறான வேலைவாய்ப்பு சமூக ஊடக விவாதத்தைத் தூண்டியுள்ளது. சிலர் வளர்ச்சி சார்ந்த திறமைகளை ஈர்ப்பதற்கான அதன் புதுமையான அணுகுமுறையைப் பாராட்டி வருகின்றனர். இன்னும் சிலர் நிதித் தேவை இருக்கும்போது ஆண்டு முழுவதும் சம்பளம் இல்லாத வேலை பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று குறிப்பிட்டுள்ளனர்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications