இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ-வின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ-வான தீபேந்தர் கோயல், "கன்டினியூ" என்ற புதிய ஹெல்த்கேர் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த புதிய நிறுவனம் மனநலம் மற்றும் உடல் ஆரோக்கிய கண்காணிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, விரிவான ஹெல்த் டிராக்கராக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"கன்டினியூ" தளம் பற்றிய விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில், தீபேந்தர் கோயல் உருவாக்கியுள்ள இப்புதிய நிறுவனம் ஊட்டச்சத்து கண்காணிப்பு, தூக்கம் கண்காணிப்பு மற்றும் தடுப்பு சுகாதார தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Upslope Advisors Pvt Ltd என்ற பெயரில் ஏப்ரல் 2023 இல் தீபேந்தர் கோயல் ஒரு நிறுவனத்தைத் துவங்கினார். இந்த நிறுவனத்திற்கு தலைவர்களாக தீபேந்தர் கோயல் மற்றும் இரண்டு சோமேட்டோ ஊழியர்கள் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுத் துவங்கப்பட்ட நிலையில் தற்போது "கன்டினியூ" என்ற பிராண்ட் பெயரில் புதிய பாதைக்குச் செல்ல துவங்கியுள்ளது.
தீபேந்தர் கோயல் தீடிரென ஹெல்த்கேர் துறைக்குள் நுழையவில்லை, கடந்த சில வருடங்களாகவே தீபேந்தர் கோயல் மற்றும் அவரது முன்னாள் காதலி மற்றும் தற்போதைய மனைவியும் ஹெல்த்கேர் மற்றும் வெல்னஸ் மீது அதீத ஆர்வம் காட்டியது மட்டும் அல்லாமல் கடந்த 4 வருடத்தில் 14 கிலோ உடல் எடையும் குறைத்தார் தீபேந்தர் கோயல்.
இதற்கு ஆரம்பமாக இருந்தது தீபேந்தர் கோயல் சொந்தமாக Ultrahuman என்னும், வியரபிள் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்தது தான். தீபேந்தர் கோயல் சோமேட்டோ மற்றும் பிளிங்கிட் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே, கன்டினியூ நிறுவனத்தில் தனிப்பட்ட முயற்சிகளை மேற்கொள்வார். இது சோமேட்டோ நிறுவனத்தின் அடிப்படை செயல்பாடுகளைப் பாதிக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
தீபேந்தர் கோயல் உருவாக்கிய புதிய "கன்டினியூ" நிறுவனம் சோமேட்டோ உடன் இணையுமா என்பது இப்போது முடிவு செய்யப்படவில்லை. ஆனால் இது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்கும் என நம்பப்படுகிறது.
சோமேட்டோ தற்போது நான்கு வணிக கிளைகளில் இயங்குகிறது - உணவு விநியோகம், Blinkit (grocery delivery), Hyperpure (ரெஸ்டாரண்ட் சப்ளை) மற்றும் ஈவென்ட்ஸ் - அதன் தற்போதைய செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறது. சமீபத்தில் District என்ற ஒரு பிரிவையும் சோமேட்டோ உருவாக்கியது.


Click it and Unblock the Notifications