Zomato பெயருக்கு பின்னால் இப்படி ஒரு ஹிஸ்டரியா? CEO தீபிந்தர் கோயல் சொன்ன ரகசியம்..!

உணவு விநியோக டெலிவரி தளங்கள் என்று சொல்லும்போது சொமேட்டோ மற்றும் ஸ்விக்கி என்ற 2 பெயர்கள் தான் நம் நினைவுக்கு வரும். சொமேட்டோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான தீபிந்தர் கோயல், தனது நிறுவனத்தின் பிரபலமான பெயரின் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யமான கதையைப் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நடந்த பிரபல நகைச்சுவை நிகழ்ச்சியில் சொமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ கலந்துகொண்டார்.

தி கிரேட் இந்தியன் கபில் ஷோ என்ற நிகழ்ச்சியில் தீபிந்தர் கோயல் மற்றும் அவருடைய மனைவி கிரேசியா முனோஸ் கலந்து கொண்டு உரையாடினர். நிகழ்ச்சியின் போது நிறுவனத்தின் தனித்துவமான பெயரின் பின்னணி குறித்து தீபிந்தர் கோயலிடம் கபில் கேட்டறிந்தார். பொட்டேட்டோ, டொமேட்டோ போன்ற பெயர்களை கேள்விப்பட்டிருக்கிறோம்.. ஆனால் அது என்ன சொமேட்டோ? என்று கபில் தீபிந்தர் கோயலிடம் கேட்டார்.

 Zomato பெயருக்கு பின்னால் இப்படி ஒரு ஹிஸ்டரியா? CEO தீபிந்தர் கோயல் சொன்ன ரகசியம்..!

அதோடு கபில் கிரிக்கெட் வீரர்களான ஹர்பஜன்சிங்கும், ஸ்ரீசாந்தும் விளம்பரத்தில் சொமேட்டோ மற்றும் சொமாட்டோ என வெவ்வேறு பெயர்களைக் கூறுவதை பார்த்தேன். உண்மையான கதை தான் என்ன? இந்தப் பெயர் எப்படி வந்தது என்று கேட்டார். ஆரம்பத்தில் தான் ஆரம்பிக்கும் நிறுவனத்திற்கு டொமேட்டோ என பெயரிட விரும்பியதாகவும் அதற்கு டொமைன் தேடியதாகவும் கோயல் தெரிவித்தார்.

கோயல் எதிர்பார்த்தபடி tomato.com மற்றும் tomaato.com என இரண்டு பெயர்களுக்கும் டொமைன் கிடைக்கவில்லை. தான் விரும்பிய பெயரிலேயே டொமைன் பெறுவதற்காக ஒரு எழுத்தை மட்டும் மாற்றி Zomato.com என்ற டொமைன் பெயரை பெற்றதாக கோயல் தெரிவித்தார்.

சொமேட்டோ நிறுவனம் மட்டுமின்றி ஸ்பெல்லிங் மிஸ்டேக்கில் உருவானது தான் கூகுள் நிறுவனத்தின் பெயர். எந்த ஆண்ட்ராய்டு மொபைலாக இருந்தாலும் டீபால்ட் சர்ச் இன்ஜினாக கூகுள் தான் இருக்கிறது. அப்படி இந்த பெயர் எப்படி உருவானது தெரியுமா? உண்மையில் கூகுள் என்ற பெயர் googol என்ற கணித தொடரின் மாற்றாகும்.

அதாவது கூகுள் என்பது 10 என்கிற நம்பரை 100 முறை பெருக்கினால் கிடைக்கும் மிகப்பெரிய எண். அதாவது இந்த நம்பரை கற்பனை செய்யவே முடியாது அவ்வளவு பெரிய எண். எனவே நூறு பூஜ்ஜியங்களை கொண்ட அவ்வளவு பெரிய என்னை குறிப்பதுதான் googol என்ற பெயர். எனவே இந்த அளவுக்கு அதிகமான தகவல்களை கூகுள் கொண்டுள்ளதால் googol என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அப்போது கூகுள் என்ற பெயருக்கு டொமைன் கிடைக்கவில்லை. இந்த டொமைனை வேறு ஒருவர் வாங்கியது போல காண்பித்துள்ளது. இதனால் googol என்ற பெயரை தவறாக google என டைப் செய்துள்ளனர். ஆனால் இந்த பெயருக்கு டொமைன் கிடைத்திருக்கிறது. அப்படி வந்தது தான் கூகுள் நிறுவனத்தின் பெயர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+