அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சோமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தனது ஸ்டார்ட் அப் பயணத்தின் ஆரம்பகால நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஏற்பாடு செய்திருந்த விசேஷ் சம்பர்க் என்ற நிகழ்ச்சியில் பேசிய தீபிந்தர் கோயல் தனது பிசினஸ் ஐடியா பற்றி தனது தந்தை கூறிய கருத்து பற்றி எடுத்துச் சொன்னார். அவரது பேச்சு வீடியோ சமூக தளங்களில் வைரல் ஆனது.

2008 ஆம் ஆண்டில் தீபிந்தர் கோயல் சோமாட்டோவை தொடங்கியபோது அது பற்றி அவரது தந்தை நம்பிக்கை கொள்ளவில்லை என்றார்.
அவரிடம் சோமாட்டோவை ஆரம்பிப்பது பற்றி கூறியபோது அவர் உன க்குத் தெரியுமா உனது தந்தை யார் என்று?
பஞ்சாபின் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்து ஒரு ஸ்டார்ட் அப்பை எப்படி நடத்த முடியும் எனக் கேட்டார். இதுதான் அப்போது இருந்த அவரது மைண்டுசெட்.
என்னால் ஒரு ஸ்டார்ட் அப்பை நடத்தவே முடியாது என என் தந்தை நினைத்தார். ஆனால் இன்றைக்கு சோமாட்டோ தொடங்கப்பட்டு அதில் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர் என தீபிந்தர் கோயல் கூறினார்.
மாடலான கிரேசியா முனோஸை இந்த ஆண்டு தீபிந்தர் கோயல் திருமணம் செய்து கொண்டார். ஷார்க் டேங்க் இந்தியாவின் மூன்றாவது சீசனுக்கு அவர் நடுவராகவும் உள்ளார். அவரது அனுபவங்கள் தொழில்முனைவோருக்கு பெரும் உத்வேகமாக உள்ளது.
சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தாலும் திறமையும் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தால் எந்தவொரு தொழிலையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்பது தனது சோமாட்டோ நிறுவனத்தின் வெற்றிக்கதை ஒரு பாடம் என்று பெருமையுடன் கூறுகிறார் தீபிந்தர் கோயல்.
உணவு டெலிவரித் துறையில் இன்றைக்கு இந்தியாவில் முதல் இடத்தில் சோமாட்டோ உள்ளது. அதன் போட்டி நிறுவனமான ஸ்விக்கிக்கு கடும் போட்டியைத் தொடர்ந்து தருகிறது. சோமாட்டோவில் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதற்காக பல்வேறு புதுமையான திட்டங்களை சோமாட்டோ அறிமுகம் செய்து வருகிறது.
அண்மையில் தங்களது வாடிக்கையாளர்கள் ஆரோக்கியமான உணவுகளை வாங்குவதற்கான தேர்வுகளை ஆர்டர்கள் செய்யும் போது அழைக்கின்றது. இந்தத் திட்டம் சோமாட்டோ வாடிக்கையாளர்களிடேயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டம் அறிமுகமான முதல்நாளிலேயே டெலிவரியின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்தது. இதுபோன்று இன்னும் பல அம்சங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாக சோமாட்டோ சிஇஓவான தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications