2 வாரத்தில் 3 பேர் அவுட்.. சோமேட்டோ உயர்மட்ட நிர்வாகத்தில் அடுத்தடுத்து ராஜினாமா..!

சோமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனராக இருக்கும் மோஹித் குப்தா 4.5 வருடம் பணியாற்றிய பின்பு தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

மோஹித் குப்தா உடன் சேர்ந்து கடந்த சில வாரத்தில் மட்டும் சோமேட்டோ நிறுவனத்தில் இருந்து 3 உயர் அதிகாரிகள் வெளியேறியுள்ளனர்.

சோமேட்டோ நிறுவனம்

சோமேட்டோ நிறுவனம்


சோமேட்டோ நிறுவனம் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து நாட்டின் 2ஆம் மற்றும் 3 ஆம் தர நகரங்களில் விரிவாக்கம் செய்து வருவதில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது. இதற்கிடையில் வர்த்தக முறையில் முக்கியமான மாற்றங்களைச் செய்து செலவுகளைக் குறைப்பதிலும் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது.

 Blinkit நிறுவனம்

Blinkit நிறுவனம்

இதேபோல் சோமேட்டோ கைப்பற்றிய Blinkit நிறுவனத்தின் வர்த்தகத்தைத் தனிப்பட்ட முறையிலும் சோமேட்டோ செயலியின் வாயிலாகவும் விரிவாக்கம் செய்து வருகிறது. குவிக் காமர்ஸ் வர்த்தகத்தில் கடுமையான போட்டி இருக்கும் காரணத்தால் ஒவ்வொரு முடிவையும் பார்த்துப் பார்த்து எடுக்கிறது சோமேட்டோ. இந்த முக்கியமான கட்டத்தில் தான் 3 உயர் அதிகாரிகள் வெளியேறினர்.

ராகுல் கஞ்சூ

ராகுல் கஞ்சூ

சோமேட்டோவின் புதிய முன்முயற்சிகள் பிரிவின் தலைவரும் முன்னாள் உணவு விநியோகத் தலைவருமான ராகுல் கஞ்சூ இந்த வார துவக்கத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சித்தார்த் ஜாவர்

சித்தார்த் ஜாவர்

இதற்கு முன்பு சோமேட்டோ நிறுவனத்தின் இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ் சேவை பிரிவின் தலைவரான சித்தார்த் ஜாவர் ராஜினாமா செய்து நிறுவனத்தை விட்டு வெளியேறியதாக அறிவித்தார்.

மோஹித் குப்தா

மோஹித் குப்தா

சோமேட்டோ தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் போதும் மேம்படுத்தத் திட்டமிட்ட போது மோஹித் குப்தா 2018 ஆம் ஆண்டில் சோமேட்டோ நிறுவனத்தின் உணவு விநியோக பிரிவின் தலைவராகச் சேர்ந்தார். இதன் பின்பு 2021ல் ஐபிஓ-வுக்கு முன்பு இணை நிறுவனர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

MakeMyTrip நிறுவனம்

MakeMyTrip நிறுவனம்

இந்தக் காலகட்டத்தில் தான் ராகுல் கஞ்சூ உணவு விநியோக பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக மாற்றப்பட்டார். சோமேட்டோவில் சேருவதற்கு முன்பு, மோஹித் குப்தா MakeMyTrip நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக இருந்தார்.

அட்ஜெஸ்ட் செய்யப்பட்ட வருவாய்

அட்ஜெஸ்ட் செய்யப்பட்ட வருவாய்

சோமேட்டோ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட செப்டம்பர் காலாண்டு முடிவில் அட்ஜெஸ்ட் செய்யப்பட்ட வருவாய் யாரும் எதிர்பார்க்காத 2,107 கோடி ரூபாய் என்ற அளவீட்டை எட்டியுள்ளது. கடந்த வருட அளவீட்டை ஒப்பிடுகையில் 48 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது.

சாதனை

சாதனை

சோமேட்டோ நிறுவனம் இதன் மூலம் முதல் முறையாகத் தனது வருவாய் அளவு 1.05 பில்லியன் டாலரை எட்டி வரலாற்று உச்சத்தைத் தொட்டுச் சாதனை படைத்துள்ளது. அட்ஜெஸ்ட் செய்யப்பட்ட வருவாய் என்பது ஆப்ரேஷன்ஸ் மற்றும் கஸ்டமர் டெலிவரி சார்ஜ் ஆகியவற்றைச் சேர்த்த வருவாய்.

நஷ்ட அளவு

நஷ்ட அளவு

இதே காலகட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ ஒருங்கிணைந்த நிகர நஷ்டம் 250.8 கோடி ரூபாயாகக் குறைந்ததுள்ளது. கடந்த ஆண்டு இதே செப்டம்பர் காலாண்டில் ரூ 434.9 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சோமேட்டோ பங்குகள்

சோமேட்டோ பங்குகள்

இன்றைய வர்த்தக முடிவில் சோமேட்டோ நிறுவன பங்குகள் 0.89 சதவீதம் சரிந்து 67.15 ரூபாயாக உள்ளது. காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நாளில் சோமேட்டோ பங்குகள் விலை 10 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி அடைந்த நிலையில் ரீடைல் முதலீட்டாளர்கள் தொடர்ந்து விற்பனை செய்தனர்.

2022 ரிப்போர்ட்

2022 ரிப்போர்ட்

இதன் எதிரொலியாகக் கடந்த 5 நாட்களில் சோமேட்டோ பங்குகள் 3.80 சதவீதம் சரிந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் சோமேட்டோ பங்குகள் 52.49 சதவீதம் சரிந்துள்ளது, இந்தச் சரிவில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். சோமேட்டோ பங்குகளின் 52 வார உச்ச அளவு 161.90 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+