கடந்த ஆகஸ்ட் மாதம் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கிய உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோ (Zomato), மார்ச் மாதத்திற்குள் சுமார் 83 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாட்ஃபார்ம் கட்டணமானது சொமேட்டோவின் வருவாய் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளது. அதன்படி 27% வருவாய் அதிகரித்துள்ளது. 2024-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 7792 கோடியை எட்டியுள்ளது.
இந்த வருவாய் அதிகரிப்பிற்கு உணவக கமிஷன் விகிதங்கள் அதிகரித்தது, விளம்பர வருவாயில் முன்னேற்றம் மற்றும் FY24-இன் இரண்டாவது காலாண்டிலிருந்து பிளாட்ஃபார்ம் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது ஆகியவை காரணங்களாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ஒரு ஆர்டருக்கு ரூ.2 என நிர்ணயிக்கப்பட்ட பிளாட்ஃபார்ம் கட்டணம் படிப்படியாக அதிகரித்து ரூ.6 ஆக உள்ளது. சொமேட்டோவின் முக்கிய போட்டியாளரான ஸ்விக்கியும் தனது ஆர்டர்களுக்கு பிளாட்ஃபார்ம் கட்டணம் விதிக்கிறது.
கூடுதலாக, சொமேட்டோவின் அறிக்கை சுவாரஸ்யமான வாடிக்கையாளர் நடத்தையையும் எடுத்துக்காட்டுகிறது. டெல்லி NCR-இல் அதிக இரவு ஆர்டர்கள் இருந்தன, அதே நேரத்தில் பெங்களூரில் கடந்த நிதியாண்டில் காலை உணவு ஆர்டர்கள் அதிக அளவில் இருந்தன.
பிளாட்ஃபார்ம் கட்டணம் என்றால் என்ன?: பிளாட்ஃபார்ம் கட்டணமானது, உணவு விநியோக ஆப்ஸில் ஆர்டர் செய்வதற்கான செலவு போன்றது, இது சொமேட்டோ மற்றும் Swiggy போன்ற நிறுவனங்களுக்கு நேரடியாக வருவாயை ஈட்ட உதவுகிறது.
ஒவ்வொரு ஆர்டருக்கும் இந்த கட்டணம் விதிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இந்த தளங்களை பயன்படுத்தி உணவு ஆர்டர் செய்யும் போது இந்த கட்டணத்திற்கான தொகையை செலவழிக்க வேண்டி இருக்கும்.
சொமேட்டோ நிறுவனம் சமீபத்தில் அதன் நிகர லாபத்தில் கணிசமான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இது இந்த காலாண்டில் ரூ. 253 கோடியை எட்டியது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ. 2 கோடி நிகர லாபத்தில் இருந்து வெகுவான வளர்ச்சியாகும்.
ஜூன் காலாண்டில் சொமேட்டோவின் வருவாய் கடந்த ஆண்டைக் காட்டிலும் 74 % அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் சொமேட்டோவின் வருவாய் ரூ.1,416 கோடியாக இருந்தது. தற்போது இது ரூ.4,206 கோடியாக உயர்ந்துள்ளது.
பிளாட்ஃபார்ம் கட்டணம் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து சொமேட்டோவின் வருவாய் மற்றும் லாபத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்களின் பார்வையில் இது கூடுதல் செலவாகும். இந்த புதிய கட்டணம் உணவு டெலிவரி துறையின் எதிர்காலத்தை எவ்வாறு மாற்றும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications