பிளாட்ஃபார்ம் கட்டணத்தில் கல்லாகட்டும் சோமேட்டோ.. 8 மாதத்தில் ரூ.83 கோடி வசூல்..!

இந்தியாவில் உணவு டெலிவரி துறையில் முன்னணி நிறுவனமாக சோமாட்டோ உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் உணவு டெலிவரிக்காக பிளாட்பார்ம் கட்டணத்தை வசூலித்து வந்தது. இந்தாண்டு மார்ச் மாதம் வரை இவ்வாறு பிளாட்பார்ம் கட்டணமாக ரூ.83 கோடியை சோமாட்டோ வசூலித்துள்ளது. இந்த விவரம் சோமாட்டோவின் வருடாந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சோமாட்டோவின் வருவாயில் பிளாட்பார்ம் கட்டணம் முக்கியப் பங்கை வகிக்கிறது. 2024 நிதியாண்டில் சோமாட்டோ வருவாய் ரூ.7792 கோடி ஆகும். முந்தைய ஆண்டை ஒப்பிட்டால் இது 27 சதவீத அதிகமாகும். ரெஸ்டாரண்ட் கமிஷன், விளம்பரங்கள் மூலம் வருவாய், பிளாட்பார்ம் கட்டணம் ஆகியவற்றால் 2024 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு வருவாய் அதிகரித்துள்ளது.

பிளாட்ஃபார்ம் கட்டணத்தில் கல்லாகட்டும் சோமேட்டோ.. 8 மாதத்தில் ரூ.83 கோடி வசூல்..!

கோல்டு ஆர்டர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கட்டணம் சிறிதளவு குறைக்கப்பட்டாலும் மேலே கூறப்பட்ட மூன்று காரணங்களாலும் அதைவிட கூடுதல் வருவாய் வந்துள்ளது. கடந்த ஆண்டு டெல்லி என்சிஆர் பகுதியில் இருந்து மிக அதிக அளவில் லேட் நைட் ஆர்டர்கள் வந்துள்ளன. அதேபோல் காலையில் அதிகளவு பிரேக்பாஸ்ட் ஆர்டர்கள் பெங்களூரில் இருந்து வந்துள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து சோமாட்டோ உணவு டெலிவரிக்கு தலா ரூ.2 கட்டணம் வசூலிக்கிறது. இது குறிப்பிட்ட மார்க்கெட்டில் மட்டும் ரூ.6 ஆக உயர்ந்துவிட்டது. இந்த கட்டணம் அறிமுகம் மற்றும் விலையேற்றம் ஆகியவற்றின் மூலம் சோமாட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களின் லாபம் பெருத்து விட்டது.

ஸ்விக்கி தான் முதன் முதலில் பிளாட்பார்ம் கட்டணத்தை அறிமுகப்படுத்தியது. 2023 ஏப்ரல் முதல் ஒரு டெலிவரிக்கு ரூ.2 ஐ வசூலிக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து சோமாட்டோவும் பிளாட்பார்ம் கட்டணத்தை அறிமுகப்படுத்தியது. பிளாட்பார்ம் கட்டணம் மூலமாக ரூ.1.25 கோடி முதல் ரூ.1.5 கோடி வருவாய் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

இது தவிர டெலிவரி கமிஷனும் கிடைக்கிறது. ஒரு ரெஸ்டாரெண்ட் ஸ்விக்கியில் அதன் விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ.1,00,000 சம்பாதித்தால் அதில் ஸ்விக்கிக்கு ரூ.20,000 கமிஷனாக தரவேண்டும். தினசரி 1.3 மில்லியன் ஆர்டர்கள் அதிகபட்சமாக சோமாட்டோவில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 150 ரெஸ்டாரண்ட்களில் ஒரு நாளைக்கு தலா 10 ஆர்டர்கள் டெலிவரி செய்யப்படுகின்றன.

கடந்த 2022-23 நிதியாண்டில் சோமாட்டோவுக்கு 647 மில்லியன் ஆர்டர்கள் குவிந்துள்ளன. இந்தியாவில் உள்ள 800 நகரங்களில் இந்த ஆர்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில் சோமாட்டோவின் போட்டி நிறுவனமான ஸ்விக்கிக்கு இதை விட குறைந்த அளவு ஆர்டரே தினசரி வருகிறது. கணக்கிட்டபோது அது தினசரி சுமார் 20 லட்சம் ஆர்டர்கள் வந்துள்ளது.

ஒரு சோமாட்டோ டெலிவரி பாய்க்கு தினசரி சராசரியாக 32 ஆர்டர்கள் தரப்படுகின்றன. இது மணிக்கு 4 டெலிவரிகள் என கணக்கிடப்பட்டுள்ளது.
சோமாட்டோவில் பகுதி நேர உணவு டெலிவரி பாயாக வேலை பார்த்தால் நல்ல சம்பளம் கிடைக்கும். உங்களது வேலை நேரத்தை விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு டெலிவரிக்கு ரூ.40 முதல் ரூ.80 வரை கிடைக்கும்.

சோமாட்டோவில் முழு நேர டெலிவரி பாயாக வேலை செய்தால் தினசரி ரூ.600 முதல் ரூ.1000 சம்பாதிக்கலாம். வாரம் ரூ.6000 முதல் ரூ.7000 சம்பாதிக்கலாம். மாதம் ரூ.25000 முதல் ரூ.30000 வரை சம்பாதிக்கலாம்.


Story Written by: jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+