இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகமாகவே இருக்கும் வேளையில், சாமானிய நடுத்தர மக்களுக்கும் இது பெரும் சுமையாக மாறியுள்ளது. ரஷ்யா கச்சா எண்ணெய் உற்பத்தியை மார்ச் மாதத்தில் இருந்து குறைக்க உள்ளதால் அடுத்த சில நாட்களில் பெட்ரோல் விலை உயர்ந்து வாகன ஓட்டிகளுக்கு ஷாக் கொடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
கடந்த சில வருடங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் வண்டிகளை தாண்டி மின்சார வாகனங்கள் மீதும் மக்களின் கவனம் திரும்பியது. அதனையடுத்து எலக்ட்ரிக் பைக்குளை வாங்கி மக்கள் உபயோகித்து வருகின்றனர்.
இந்த நிலையில் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது மூலம் 1 லட்சம் ரூபாய் சேமிக்க முடியும் என ஓலா சிஇஓ பாவிஷ் அகர்வால் ரியல் டைம் எக்ஸாம்பிள் உடன் காட்டியுள்ளார்.
Zomato ஊழியருக்கு உதவிய Ola மின்சார வாகனம்!
இன்று மக்கள் வீட்டில் அதிகம் சமைப்பதைவிட சுலபமாக ஆன்லைன் மூலம் Swiggy மற்றும் Zomato ஆப்கள் மூலம் விரும்பிய உணவை வாங்கி சாப்பிடுகின்றனர். சோமேட்டோவின் ஊழியர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து உணவுகளை டெலிவரி செய்து விடுவார்கள்.
டெலிவரி ஊழியர்
ஆனால் Swiggy மற்றும் Zomato டெலிவரி ஊழியர் சமாளிக்க வேண்டிய முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் விலை உள்ளது. இந்த நிலையில் சோமேட்டோ டெலிவரி ஊழியர் ஒருவர் Ola எலக்ட்ரிக் வாகனத்தை உபயோகித்ததன் மூலம் 9 மாதங்களில் சுமார் 1 லட்சம் வரை பணத்தை சேமித்துள்ளதாக கூறியுள்ளார்.
Ola சிஇஓ-வின் நெகிழ்ச்சியான ட்வீட்!
ஓலா நிறுவனத்தின் CEO -வான பாவிஷ் அகர்வால் அவரின் ட்விட்டர் பக்கத்தில் Zomato ஊழியரான சந்தோஷ் என்பவர் ஓலா எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம் உபயோகித்ததன் மூலம் 9 மாதங்களில் சுமார் ரூ.1 லட்சத்தை சேமித்துள்ள நெகிழ்ச்சியான கதையை அவருடன் செல்ஃபி எடுத்து பகிர்ந்துள்ளார்.
பாவிஷ் அகர்வால்
அப்பதிவில் அவர் சந்தோஷ் அவர்களை ஒரு டிராபிக் சிக்னலில் சந்தித்ததாகவும், அவர் மிகவும் சுறுசுறுப்பான நபர் எனவும், அவர் இரண்டு ஓலா எலக்ட்ரிக் பைக்குகளை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
மேலும் அவர் அந்த 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்தி இதுவரை 50,000 கிலோ மீட்டர் வரை ஓட்டியுள்ளதாகவும், அதனை பயன்படுத்தியதால் 9 மாதங்களில் சுமார் ரூ.1 லட்சம் சேமித்ததாகவும் சந்தோஷ் கூறியதாக பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவானது ட்விட்டரில் 86,00 இந்தப் பதிவானது ட்விட்டரில் 86,000-க்கும் மேற்பட்ட லைக்குகளையும், பல ரீ-ட்வீட்டுகளையும், ஆதரவான கமெண்ட்டுகளையும் பெற்றுள்ளது. 0-க்கும் மேற்பட்ட லைக்குகளையும், பல ரீ-ட்விட்டுகளையும், ஆதரவான கமெண்டுகளையும் பெற்றுள்ளது.
எலக்ட்ரிக் வாகனம் vs பெட்ரோல், டீசல் வாகனம்!
பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் ஸ்கூட்டர்களின் விலையைக் காட்டிலும் இருசக்கர எலக்ட்ரிக் வாகனத்தின் விலை சற்றுக் அதிகம் தான். நீண்டகால அடிப்படையில் பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களைவிட எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஆகும் பராமரிப்புச் செலவுகளும், எரிபொருள் செலவுகள் பெரிய அளவில் குறைவு.
மின்சார கட்டணம்
பெட்ரோல் வாகனத்தில் தினமும் நாம் அன்றைய விலைக்கு வாகனத்திற்கு பெட்ரோல், டீசல் போட்டே ஆக வேண்டும். அது எவ்வளவு உயர்வாக இருந்தாலும் சரி வேறு வழியில்லை. ஆனால் எலக்ட்ரிக் கார் மற்றும் பைக்குகளுக்கு சார்ஜிங் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். பெட்ரோல், டீசல் விலையுடன் ஒப்பிடுகையில் சார்ஜிங் கட்டணம் மிகக் குறைவுதான்.
எலக்ட்ரிக் வாகனத்தின் சாதக-பாதகங்கள்!
கடந்த சில ஆண்டுகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் மூலம் செலவுகள் குறைவானதாகவும், பராமரிப்பு எளிமையானதாக இருப்பதால் அதிகப்படியான எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கப்படுகிறது. ஆனால் சில தயாரிப்பு கோளாறுகள் காரணமாக எலர்ட்ரிக் வாகனங்கள் திடீரென தீப்பிடிப்பது, வெடிப்பது எனப் பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆர்வமும் தயக்கமும்
அதனால் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் மக்களுக்குச் தயக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் எலக்ட்ரிக் வாகனத்தின் விலைகள் உயர்வாலும் சாதாரண மக்கள் அதனை வாங்கவும் முடிவதில்லை. அதனால் மக்கள் சாதக, பாதகங்களை நன்கு அறிந்து முடிவை எடுப்பது நல்லது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications