இந்தியாவில் உணவு மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி நிறுவனங்கள் வேகமான வளர்ச்சியை அடைந்து வருகின்றன. இதனால் லட்சக்கணக்கானவர்களுக்கு டெலிவரி பார்ட்னர்களாக வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
உணவு டெலிவரியில் முன்னணி நிறுவனமாக zomato செயல்பட்டு வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டில் சோமேட்டோ நிறுவனத்தில் 15 லட்சம் பேர் டெலிவரி பார்ட்னர்களாக பணிபுரிந்தனர் என அதன் நிறுவனர் தீபிந்தர் கோயல் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தரவின்படி பார்க்கும்போது ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேரம் பணிபுரிபவர்கள் மாதத்திற்கு சராசரியாக 28 ஆயிரம் ரூபாயை ஊதியமாக பெற்றிருக்கின்றனர் என கூறியுள்ளார். இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனங்களில் பிரஷ்ஷர்களுக்கு கொடுக்கப்படும் சராசரி சம்பளம் 3.2- 3.6 லட்சம் வரையில் சம்பளம் பெறுகின்றனர்.
இது தவிர அவர்களுக்கு எரிபொருள் செலவினத்திற்காக மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தங்கள் நிறுவனத்தில் டெலிவரி பார்ட்னர்களாக வேலைக்கு சேர்ந்த அனைவருக்குமே காப்பீடு திட்டத்தை வழங்கியுள்ளது எனக் கூறியுள்ளார்.
விபத்து காப்பீடு, இறப்பு காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு இதில் அடங்கும் எனக் கூறியுள்ள அவர் 2024 ஆம் ஆண்டில் 53 கோடி ரூபாய் இதுபோல காப்பீடு தொகையாக நாங்கள் பெற்று தந்திருக்கிறோம் என கூறியுள்ளார். இதில் 55 சதவீத காப்பீடு விபத்து அல்லாத பிற செலவினங்களுக்காக வழங்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் எங்கள் நிறுவனத்தில் டெலிவரி பார்ட்னர்களாக வேலை செய்பவர்கள் ஆண்டின் எந்த தருணத்தில் வேண்டுமானாலும் லாகின் செய்து வேலை செய்யலாம் என்றும் சிலர் நாள்தோறும் பார்ட் டைமாக வேலை செய்வார்கள் ஒரு சிலர் குறிப்பிட்ட பண்டிகை காலங்களில் மட்டும் வேலை செய்வார்கள். அவரவர் தேவைக்கு ஏற்ப வேலை செய்தாலும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து வசதிகளையும் எங்கள் நிறுவனம் செய்து தருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டில் வேலை செய்தவர்களின் சராசரி ஊதியம் 23 ,000 ரூபாயாக இருந்தது அது 2024 ஆம் ஆண்டில் 28,000 ரூபாய் என உயர்ந்துள்ளது. தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய பார்ட்னர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடைய இந்த பதிவுக்கு எக்ஸ் தளத்தில் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். குறிப்பாக டெலிவரி பார்ட்னர்களுக்கு காப்பீடு வழங்கியிருக்கும் உங்களுடைய இந்த முயற்சி பாராட்டத்தக்கது என கூறியுள்ளனர்.
முன்னதாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது போன்ற டெலிவரி நிறுவனங்களில் டெலிவரி வேலையில் ஈடுபடும் ஒரு கோடி நபர்களுக்கு மத்திய அரசு மருத்துவ காப்பீடு வழங்கும் என்றும் அவர்களுக்கு என அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications