டெல்லியின் ஜிடிபி நகரில் நடுத்தெருவில் கதறி அழுதுக் கொண்டிருந்த சோமாட்டோ டெலிவரி மேனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அந்த டெலிவரி ஊழியரிடம் ஒருவர் விசாரித்தபோது, சோமாட்டோ நிறுவனம் தனது அக்கவுன்ட்டை பிளாக் செய்துவிட்டதாகவும் இதனால் தனது சகோதரியின் திருமணம் பாதித்துவிடும் எனக் கூறியுள்ளார்.
சோஹம் பட்டாச்சார்யா என்பவர் அந்த டெலிவரி ஊழியரை படம் பிடித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். இந்த பதிவு சமூகவலை தளங்களில் வைரலாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த பிரச்னையில் நடவடிக்கை எடுப்பதாக சோமாட்டோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.

பட்டாச்சார்யா தனது பதிவில், இந்த ஊழியரின் சகோதரிக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற உள்ளது. ஆனால் சோமாட்டோ மற்றும் சோமாட்டோ கேர் அவரது அக்கவுன்ட்டை பிளாக் செய்துவிட்டது என்று கூறியுள்ளார்.
மேலும் அந்த டெலிவரி ஊழியரின் நிலைமை பற்றி சில வரிகளையும் அவர் பகிர்ந்திருந்தார். அதில் ஜிடிபி நகரின் அருகில் அவர் ரோட்டில் நின்றபடி கதறி அழுதுக் கொண்டிருந்தார். அந்தப்பக்கமாக வந்தவர்களிடம் அவர் ஏதாவது பணம் தருமாறு கேட்டுக் கொண்டிருந்தார். தான் சாப்பிடவில்லை என்று என்னிடம் கூறினார். சகோதரியின் திருமணத்துக்காக பணம் சேர்த்து வைத்திருந்ததாகக் கூறினார் எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவை வைரலாக்கும்படி பட்டாச்சார்யா வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தப் பதிவு வைரலானதும் 3.3 மில்லியன் பார்வையைப் பெற்றது.
இந்த நிலையில் சோமாட்டோ நிறுவனம் இந்தப் பதிவுக்கு பதிலளித்தது.
அதில் தனது டெலிவரி பார்ட்னர்களை மிகவும் மதிப்பதாகவும், இந்தப் பிரச்னை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தது.
எங்கள் டெலிவரி பார்ட்னர்களை நாங்கள் மிகவும் மதிக்கிறோம், மேலும் ஐடியைத் தடுப்பது போன்ற செயல்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உறுதியாக இருங்கள், இதுபோன்ற விஷயங்களை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்.
இதை நாங்கள் கவனிப்போம் என்று உறுதியளிக்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களைப் போலவே எங்கள் டெலிவரி பார்ட்னர்களும் எங்களுக்கு முக்கியம் என்று சோமாட்டோ விளக்கம் அளித்தது.

இந்த இடுகைக்கு மக்கள் எவ்வாறு பதிலளித்தனர் என்பதை இங்கே பார்க்கவும்:
"இது உண்மையில் சோமாட்டோவின் வெட்கமற்ற செயல்; இந்த கட்டுக்கடங்காத நடத்தை நியாயமானது அல்ல" என்று ஒரு நபர் பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், "சோமாட்டோ குடும்பம் அவரைக் கவனிக்கவில்லை என்றால், எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) குடும்பம் அவரைக் கவனிக்கட்டும். தனது சகோதரிக்கு அவர் எதிர்பார்க்கும் சிறந்த திருமண ஏற்பாடுகளை அவர் வைத்திருப்பதாக நம்புவோம். நம்மால் முடிந்த எல்லா வழிகளிலும் அவருக்கு உதவுவோம் என்று கூறியுள்ளார்.
வெட்கக்கேடான சோமாட்டோ. இது சரி செய்யப்படாவிட்டால், இனி உங்களிடமிருந்து எந்த ஆர்டரும் செய்யமாட்டேன். ஸ்விக்கியில் செய்வேன் என்று மூன்றாவது நபர் தெரிவித்தார்.
நான்காவது ஒருவர், "ஏய், தீபிந்தர் கோயல். இதை நீங்கள் ஆராய வேண்டும். ஒரு போட் பதில் வேலை செய்யாது. தயவு செய்து வேகமாக செயல்பட்டு உங்கள் ரைடரின் சிக்கலை தீர்க்கவும். அவர்கள் உங்கள் டெலிவரி பார்ட்னர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள், மேலும் உங்கள் நிறுவனமான சோமாட்டோவுக்கு அதிக மதிப்பைச் சேர்க்கவும் என பதிவிட்டுள்ளார்.
Story written by: I.jayachandran


Click it and Unblock the Notifications