புனேவை சேர்ந்த ஸ்ரீபால் காந்தி என்பவர் ஒரு எளிய மதிய உணவு ஆர்டர் எப்படி தனக்கு மறக்க முடியாத வாழ்க்கை பாடமாக மாறியது என்பதை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். அந்த பதிவில் ஸ்ரீபால் காந்தி கூறியிருப்பதாவது: மதிய உணவுக்காக ஆன்லைனில் சப்வே உணவகத்தில் பனீர் டிக்கா, சான்ட்விச். பிங்கோ சிப்ஸ் மற்றும் ஓட் திராட்சை குக்கீகள் ஆர்டர் செய்தேன். சிறிது நேரத்தில் நான் செய்த உணவு ஆர்டர் வந்தது.
டெலிவரி நபர்
டெலிவரி நபரிடம் வாங்கி பாக்கெட்டை பார்த்தால் அதில் சாண்ட்விச் மட்டுமே இருந்தது. சிப்ஸ் மற்றும் குக்கீகள் இல்லை. இதனையடுத்து டெலிவரி நபரிடம் தெரிவித்தேன். தயக்கம் மற்றும் சந்தேகம் கொண்ட நபர்,? சார் நீங்க உணவகம் அல்லது சோமேட்டோவை தொடர்பு கொண்டு பேசுங்க என்று பணிவுடன் தெரிவித்தார். இதனையடுத்து நான் சப்பே உணவகத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்தேன்.

உணவகம் உடனடியாக தவறுக்கு மன்னிப்பு கேட்டது. மேலும் அவர்கள், டெலிவரி நபரை திருப்பி அனுப்ப முடியுமா? தவறுக்கு நாங்கள் அவருக்கு இழப்பீடாக ரூ.20 கொடுப்போம் என்று சொன்னார்கள். பொதுவாக உணவு டெலிவரி தளமான சோமேட்டோ அவர்களுக்கு (டெலிவரி செய்பவர்கள்) அறிவுறுத்தும் வரை, டெலிவரி நபர்கள் உணவகத்திற்கு திரும்ப வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் சோமேட்டோதான் அவர்களுக்கு பணம் கொடுக்கிறது உணவகங்கள் அல்ல. கூடுதல் பயணங்கள் அவர்களின் முறையான கடமைகளுக்கு அப்பாற்பட்டவை.
இழப்பீடு
ஆனாலும் நான் உணவகம் சொன்னதை அந்த டெலிவரி நபரிடம் தெரிவித்தவுடன், அவர் கொஞ்சமும் தயங்காமல், சார் இது எனது பொறுப்பு. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று என்னிடம் தெரித்தார். பின்பு தவறிய உணவுகளை வாங்க மீண்டும் சப்வே உணவகத்துக்கு சென்றார். திரும்பி வந்து புன்னகையுடன் அவற்றை என்னிடம் கொடுத்தார். சப்வே உணவகத்திடமிருந்து ரூ.20 இழப்பீட்டை கூட அவர் வாங்க மறுத்து விட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், கடவுள் எனக்கு இவ்வளவு கொடுத்திருக்கிறார். வேறொருவர் செய்த தவறுக்காக நான் ஏன் இந்த பணத்தை வாங்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் தனது கடந்த காலத்தை என்னிடம் கூறும்போது வாயடைத்து போனேன். அந்த டெலிவரி நபர், சிறிது காலத்துக்கு முன்பு ஷபூர்ஜி பல்லோன்ஜியில் ஒரு கட்டுமான மேற்பார்வையாளராக இருந்து மாதம் ரூ.1.25 லட்சம் சம்பாதித்தார்.
கார் விபத்து
ஆனால் ஒரு கார் விபத்து அவரது வாழ்க்கையை புரட்டி போட்டது. அவரது இடது கை மற்றும் கால் செயலிழந்தது. அவர் தனது வேலை, நிலைத்தன்மை இழந்தாா. சிறிது காலத்திற்கு நம்பிக்கையை இழந்தார். பின்பு சோமேட்டோவில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
சோமேட்டோ எனக்கு ஒரு வேலை, ஒரு வாய்ப்பு, ஒரு நோக்கம் கொடுத்தார்கள். சார் சோமேட்டோ என் குடும்பத்தை வாழ வைத்தது. நான் மாற்றுத்திறனாளியாக இருக்கலாம் ஆனால் எனக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சோமேட்டோவின் பெயர் பாதிக்கப்பட நான ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன். எனது மகள் இப்போது பல் மருத்துவம் படித்து வருகிறார். நான் என் வருமானத்திற்காக மட்டுமல்ல அவளுடைய கனவை உயிர்பிக்கவே டெலிவரி பணியை செய்கிறேன் என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.
சாக்குப்போக்கு
அவர் வாழ்க்கையை குறை சொல்லவில்லை, புகார் சொல்லவில்லை அவர் சாக்குப்போக்கு சொல்லவில்லை. சுவாமி சமர்த்தரை (அவரது நம்பிக்கை) நம்பினார். மேலும் கடவுள் என்னுடன் இருக்கிறார் நான் ஏன் கவலைப்பட வேண்டும்? என்றார்.
நம்பிக்கை
இன்று எனக்கு ஒரு சாண்ட்விச் கிடைத்தது ஆனால் அதனுடன் தங்கியிருந்தது நன்றியுணர்வு, மீள்தன்மை மற்றும் நம்பிக்கை. சோமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் மற்றும் குழுவினருக்கு நன்றி. நீங்கள் (சோமேட்டோ குழு) அதை உணராமல் இருக்கலாம், ஆனால் மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்துவதற்கான உங்கள் முடிவு வாழ்க்கையை மிகவும் ஆழமான முறையில் மாற்றுகிறது என்று பதிவு செய்து இருந்தார். இந்த பதிவு வைரலாகி வாசகர்களிடமிருந்து பாராட்டுக்களை பெற்றது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications