உணவு விநியோகத் துறையின் முன்னணி நிறுவனமான சொமேட்டோ ஆப்பிள் ஐபோன் சாதனங்களில் மட்டும் பயன்படுத்தப்படும் புதிய அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. உணவு டெலிவரி, குவிக் காமர்ஸ் போன்ற சேவைகளை வழங்கும் இந்த நிறுவனம் தற்போது பொழுதுபோக்கு சேவைகளை வழங்கும் வகையில் "டிஸ்ட்ரிக்ட்" என்ற புதிய ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிளின் ஆப் ஸ்டோர் தகவலின் படி டிஸ்ட்ரிக்ட் அப்ளிகேஷன் மூலம் டைனிங் சர்வீஸ், மூவிஸ், ஸ்போர்ட்ஸ் டிக்கெட், ஷாப்பிங் போன்ற அனைத்து சேவைகளையும் மக்கள் பெற முடியும்.
முன்னதாக பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில் சொமேட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தீபிந்தர் கோயல் புதிய அப்ளிகேஷன் அடுத்த 4 வாரங்களுக்குள் வெளியாகும் என்று கூறியிருந்தார்.

சொமேட்டோ டிஸ்ட்ரிக்ட் ஆப் என்றால் என்ன?: சொமேட்டோ டிஸ்ட்ரிக்ட் அப்ளிகேஷன் மூலம் உணவகங்கள், திரைப்பட டிக்கெட் புக்கிங், விளையாட்டு போட்டிகளுக்கான டிக்கெட் புக்கிங், நேரலை நிகழ்வுகள், ஷாப்பிங் மற்றும் தங்குமிடங்களுக்கான புக்கிங் போன்ற பல சேவைகளை ஒரே இடத்தில் பெற முடியும்.
இதன் விளைவாக வாடிக்கையாளர்கள் வெவ்வேறு அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. வெளியே செல்ல விரும்பும் வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் அனைத்து சேவையையும் பெறுவதற்காக சொமேட்டோ டிஸ்ட்ரிக்ட் அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், திரைப்படங்கள், நேரலை நிகழ்வுகளுக்கான டிக்கெட்களை எளிதில் பயனர்கள் முன்பதிவு செய்யலாம்.
இன்றைய வேகமான உலகில் பலரும் பணிக்கு சென்று விட்டு, வார இறுதி நாட்களில் வெளியில் சென்று குடும்பத்துடன் கழித்து வருகின்றனர். அதற்கு ஏதுவாக டிஸ்ட்ரிக்ட் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து விதமான பொழுதுபோக்கு சேவைகளையும் ஒரு சில கிளிக்குகளில் பெற முடியும்.
சமூக ஊடகத் தளங்கள் வழியாக டிஸ்ட்ரிக்ட் அப்ளிகேஷனின் அறிமுகத்தை வெளியிட்ட தீபிந்தர் கோயல் உணவு விநியோகம் மட்டுமின்றி பிற சேவைகளை வழங்குவதிலும் நிறுவனம் கவனம் செலுத்துவதாக கூறினார்.
சொமேட்டோவின் Q2 காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகள்: 2025 நிதியாண்டின் 2-வது காலாண்டில் சொமேட்டோ நிறுவனம் அதன் செயல்பாடுகளின் மூலம் ரூ.4,799 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது 2024-ஆம் நிதியாண்டின் 2-வது காலாண்டில் ரூ.2,848 கோடியாக இருந்தது. மேலும் இந்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவுகள் ரூ.4783 கோடி. இது ஒரு வருடத்திற்கு முன்பு, அதாவது கடந்த நிதியாண்டின் 2-வது காலாண்டில் ரூ.3,039 கோடியாக இருந்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications