உள்ளிட்டவற்றை நேரடியாக மக்களிடம் டெலிவரி செய்யும் செயலிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக ஸோமேட்டோ செயல்படுகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் இதில் டெலிவரி பார்ட்டனர்களாக இணைந்து பகுதி நேரமாகவும் முழு நேரமாகவும் சம்பாதிக்கின்றனர்.
ஸோமேட்டோ தங்களுடன் இணைந்து டெலிவரி பார்ட்னர்களாக செயல்படுபவர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் வரி தொகையை திரும்ப பெறுவதற்கான பணியை எளிதாக்கி இருக்கிறது. தங்களுடன் இணைந்து டெலிவரி பார்ட்னர்களாக செயல்படக்கூடிய நபர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்து டிடிஎஸ் பணத்தை திரும்ப பெறுவதற்கான எளிய முறையை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக ஸோமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தீபிந்தர் கோயல் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில் ஸோமேட்டோ டெலிவரி பார்ட்னர்களுக்கான செயலியில் அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் தொகையை வருமானவரி கணக்கினை தாக்கல் செய்து எளிதாக பெறுவதற்கான செயல் முறையை கொண்டு வந்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்ட 48 மணி நேரங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஸோமேட்டோ டெலிவரி பார்ட்னர்கள் தங்களுடைய வருமான வரியை தாக்கல் செய்துள்ளனர் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கடந்த ஆண்டில் ஸோமேட்டோ நிறுவனம் தங்களுடன் இணைந்து வேலை செய்யக்கூடிய டெலிவரி பார்ட்னர்களுக்கு மட்டும் 4,000 கோடி ரூபாயை ஊதியமாக வழங்கி உள்ளது என கூறியுள்ளார்.
தற்போது உள்ள விதிமுறைகளின் அடிப்படையில் டெலிவரி பார்ட்னர்களுக்கு வழங்கக்கூடிய சம்பளத்தில் ஒரு சதவீதம் தொகையை டிடிஎஸ் ஆக பிடிக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டில் மட்டும் 40 கோடி ரூபாயை டிடிஎஸ் பிடித்தம் செய்திருக்கிறோம் எனக் கூறியுள்ளார். தற்போது டெலிவரி பார்ட்னர்களுக்கான செயலியிலேயே அவர்களுடைய வருமானவரி கணக்கை தாக்கல் செய்து, டிடிஎஸ் தொகையை திரும்ப பெற்றுக் கொள்வதற்கான வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறோம், இதன் மூலம் முதன்முறையாக பலர் வருமானவரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர் என கோயல் தெரிவித்துள்ளார்.
ஸோமேட்டோவில் சுமார் 4,18,000 பேர் டெலிவரி பார்ட்னர்களாக செயல்பட்டு வருகின்றனர். 2024 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஸோமேட்டோவின் லாபம் 125 கோடியாக உயர்ந்தது. நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் என்பது 73% என உயர்ந்து 3,526 கோடி ரூபாயாக இருக்கிறது. ஸோமேட்டோ நிறுவனம் பிளிங்கிட் தளத்தை வாங்கியதை அடுத்து அதன் மூலமும் பெரிய லாபத்தை ஈட்டி வருகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications