சோமேட்டோ: ஐபிஓ-க்கு பின் பெரிய டீல்.. ஜியோமார்ட் உடன் போட்டி..!

ஐபிஓ மூலம் இந்திய முதலீட்டு சந்தையைக் கலக்கிய சோமேட்டோ தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில், ஐபிஓ வெளியீட்டுக்கு முன்பே ஆன்லைன் மளிகை பொருட்கள் டெலிவரி சேவையில் இறங்குவதற்காக க்ரோபர்ஸ் நிறுவன பங்குகளை வாங்க சோமேட்டோ திட்டமிட்டு ஒப்பந்தம் செய்தது.

தற்போது இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்குச் சிசிஐ அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சோமேட்டோ இனி ஆன்லைன் உணவு டெலிவரியில் மட்டும் அல்லாமல் மளிகை மற்றும் உணவு பொருட்கள் டெலிவரியிலும் செயல்படும்.

சோமேட்டோ நிறுவனத்தின் இந்த அதிரடி பல முன்னணி நிறுவனங்களுக்குப் பெரும் போட்டியாக அமைந்துள்ளது.

சோமேட்டோ நிறுவனம்

சோமேட்டோ நிறுவனம்

ஐபிஓ வெளியிடுவதற்கு முன்பு ஸ்விக்கி நிறுவனத்திற்குப் போட்டியாகச் சோமேட்டோ நிறுவனம் இந்தியா முழுவதும் உணவு டெலிவரி செய்வது போல மளிகை மற்றும் உணவுப் பொருட்களைத் தனது டெலிவரி தளத்தில் விற்பனை செய்யத் திட்டமிட்டது.

க்ரோபர்ஸ் உடன் கூட்டணி

க்ரோபர்ஸ் உடன் கூட்டணி

இதற்காகச் சோமேட்டோ இத்துறையில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனமான க்ரோபர்ஸ் உடன் கூட்டணி வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆரம்பக்கட்டத்தில் க்ரோபர்ஸ் நிறுவனத்தை மொத்தமாகச் சோமேட்டோ கைப்பற்றத் திட்டமிட்டது.

9.3 சதவீத பங்குகள் மட்டும்

9.3 சதவீத பங்குகள் மட்டும்

ஆனால் பல்வேறு காரணங்களுக்காக மொத்தமாக வாங்குவதைக் கைவிட்டுத் தற்போது கிரோபர்ஸ் மற்றும் அதன் மொத்த விலை விற்பனை நிறுவனமான Hands of Trades-ல் இருந்து 9.3 சதவீத பங்குகளைக் கைப்பற்ற முடிவு செய்து இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

சிசிஐ அமைப்பு ஒப்புதல்

சிசிஐ அமைப்பு ஒப்புதல்

இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்குத் தான் தற்போது சிசிஐ அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் மூலம் சோமேட்டோ கிரோபர்ஸ் மற்றும் Hands of Trades ஆகிய இரு நிறுவனத்திலும் தலா 9.3 சதவீத பங்குகளை வாங்க உள்ளது.

க்ரோபர்ஸ் இண்டர்நேஷ்னல் பிடிஈ

க்ரோபர்ஸ் இண்டர்நேஷ்னல் பிடிஈ

கிரோபர்ஸ் மற்றும் Hands of Trades ஆகிய இரு நிறுவனங்களும் தற்போது அதன் தாய் நிறுவனமான சிங்கப்பூர்-ஐ சேர்ந்த க்ரோபர்ஸ் இண்டர்நேஷ்னல் பிடிஈ நிறுவனத்தின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காகச் சோமேட்டோ சுமார் 100 மில்லியன் டாலர் அளவிலான தொகையில் க்ரோபர்ஸ் இண்டர்நேஷன்ல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

அமேசான் முதல் டன்சோ வரை

அமேசான் முதல் டன்சோ வரை

கொரோனா காலத்தில் ஆன்லைன் சேவை பெறுவோர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், அமேசான், பிளிப்கார்ட், ஜியோமார்ட், பிக்பேஸ்க்ட், டன்சோ, ஆகியவை மளிகை மற்றும் உணவுப் பொருட்கள் வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவிலான விரிவாக்கத்தைச் செய்துள்ளது.

போட்டி அதிகரிப்பு

போட்டி அதிகரிப்பு

ஈகாமர்ஸ் நிறுவனங்களைத் தாண்டி ஆன்லைன் டெலிவரி சேலையில் சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தற்போது மிகப்பெரிய அளவிலான போட்டி உருவாகியுள்ளது.

சோமேட்டோ ஐபிஓ

சோமேட்டோ ஐபிஓ

சோமேட்டோ தனது வெற்றிகரமான ஐபிஓ-வில் அதிகளவிலான முதலீட்டைத் திரட்டியுள்ள நிலையில், தற்போது நம்பிக்கையுடன் புதிய வர்த்தகத் துறையில் இறங்க ஆர்வம் காட்டி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+