இந்தியாவின் பிரபல உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ தனது டெலிவரி பார்ட்னர்களுக்கு, வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும் டிப்ஸை 100% கொடுத்து விடுவதாக விளக்கம் கொடுத்துள்ளது.
உணவு டெலிவரி நிறுவனங்கள் டெலிவரி பார்ட்னர்களுக்கு வழங்கப்படும் டிப்ஸ்-ஸில் பல தவறான கருத்துகள் இருந்து வருவதாக நம்பப்படுகின்றது.
அதில் முக்கியமாக டிப்ஸ் முழுவதையும் நிறுவனம் டெலிவரி பார்ட்னர்களுக்கு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது, இரண்டாவது வழங்கப்படும் டிப்ஸ்கள் சரியான நேரத்தில் டெலிவரி பார்ட்னர்களை சென்றடைவதில்லை என்பதாகும்.
100% டிப்ஸ் மாற்றப்படும்
இந்த டிப்ஸ்கள் வாராந்திர அடிப்படையிலோ அல்லது மாத அடிப்படையிலோ மாற்றப்படும், ஆனால் தினசரி கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றாச்சாட்டுகள் இருந்து வருகின்றது.
ஆனால் உண்மையில் டிப்ஸில் 100% டெலிவரி பார்ட்னர்களுக்கு மாற்றப்படும். அதுவும் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்படும்.
கட்டணங்கள் எங்களுக்கு?
இதற்காக அனைத்து பேமெண்ட் வசதிக்கான கட்டணங்களை நாங்கள் பெறுகிறோம் என்று இது குறித்து நிறுவனம் தனது வலைதள பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த டிப்ஸ்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்டவுடன் மாற்றம் செய்ய்யப்படும். டெலிவரி பார்ட்னர்கள் பெறும் அனைத்து டிப்ஸ்களும், 80% டெலிவரி பார்ட்னர்களின் வங்கிக் கணக்குகளுக்கு 60 நிமிடங்களில் மாற்றம் செய்யப்படும் என்றும், அவற்றில் 92% 24 மணி நேரத்திற்குள் வரவு வைக்கப்படும் என்றும் சேமோட்டோ தனது குறிப்பில் தெரிவித்துள்ளது.
100% உறுதியா கிடைக்குமா?
எங்கள் வங்கிக் கூட்டாளருடன் இணைந்து நாங்கள் 100% பெறுவதை நாங்கள் உறுதி செய்து வருகிறோம் என சோமேட்டோ தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
டெலிவரி ஏஜெண்டுகளுக்கு பகிரப்படும் சில டிப்ஸ் குறித்தான விவரங்களையும் பகிர்ந்துள்ளது.
ஒரு ஆர்டருக்கு எவ்வளவு?
தினசரி சராசரியாக 5% ஆர்டர்கள் டிப்ஸை கொண்டது.
தீபாவளியன்று இது 6.3% ஆகவும் அதிகரித்தது.
வாடிக்கையாளர்கள் சராசரியாக 27 ரூபாய் டிப்ஸ் செய்கிறார்கள்.
கடந்த மாதம் 8652 டெலிவரி பார்ட்னர்கள் 1,000-க்கும் மேலான டிப்ஸை பெற்றுள்ளனர்.
யார் கொடுத்தார்கள்?
எல்லாவற்றுக்கும் மேலாக சோமேட்டோ டெலிவரி பார்ட்னர்களுக்கு யார் டிப்ஸை கொடுத்தார்கள். அவர்கள் அதனை எப்போது பெறுவார்கள் என டிப்ஸை பெற்றவுடன் மெசேஜ் அனுப்பும் என்றும் தெரிவித்துள்ளது.
கூடுதலாக டெலிவரி பார்ட்னர்கள், வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நன்றியினை தெரிவிக்க சிறு சிறு துணுக்கு செய்திகளையும் கிளிக் செய்து கொள்ளலாம்.
வாடிக்கையாளர்களின் தாராளம்
சோமேட்டோ நிறுவனம் இந்த டிப்ஸ் ஆப்சனை கடந்த 2019ல் தொடங்கியது. இது வாடிக்கையாளர்களின் தாராள மனப்பான்மை தெரிவிக்கிறது. நாங்கள் இன்று வெகுதூரம் வந்து விட்டோம் என ட்விட்டர் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
தொடரும் நஷ்டம்
சோமேட்டோ நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் நிகர நஷ்டமாக 250.8 கோடி ரூபாயினை கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 434.9 கோடி ரூபாயாக இருந்தது. இதே இதன் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் விகிதம் 62.2% அதிகரித்தும், 1661 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1024 கோடி ரூபாயாக இருந்தது.


Click it and Unblock the Notifications