உலகின் பல்வேறு டெக் நிறுவனங்களும், ஸ்டார்ட் அப்களும் பணி நீக்கம் செய்து வரும் நிலையில், சோமேட்டோவின் தீபிந்தர் கோயல் தனது நிறுவனத்தில் 800 வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மற்ற நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார்களோ? அவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இது பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும் எனலாம்.
800 வேலை வாய்ப்புகள்
இது குறித்து லிங்க்ட் பக்கத்தில், ஹலோ எவரி ஒன் என தெரிவித்துள்ளார். எங்கள் நிறுவனத்தில் 800 வேலை வாய்ப்புகள் உள்ளன. சோமோட்டோவில் 5 வேலைகள் உள்ளன. ஆக உங்களுக்கு 5 பாத்திரங்களில் 800- வேலைகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தாலும் பரிந்துரை செய்யுங்கள்.
மெயில் அனுப்புங்கள்
சாத்தியமான ஊழியர்களை தனது குழு விரைவில் சென்றடையும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பாத்திரங்களில் ஏதேனும் ஒன்றை பற்றி மேலும் தெரிந்து கொள்ள deepinder@zomato.com- ல் எனக்கு மெயில் அனுப்புங்கள் என தெரிவித்துள்ளார்.
எனினும் என்னென்ன பதவிகளுக்கு வேலை வாய்ப்பு உள்ளது என்பது குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை. ஆக விருப்பம் இருப்பவர்கள் இது குறித்து மெயில் அனுப்பி தெரிந்து கொள்ளலாம்.
உணவு டெலிவரி
இன்றைய காலகட்டத்தில் நகர பகுதிகளில் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்து கொள்ளலாம். நேராக உணவகங்களில் சென்று உணவு சாப்பிடுவதை விட, ஆன்லைன் மூலம் தங்களுக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடலாம். இதன் காரணமாக பல உணவு டெலிவரி நிறுவனங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றது.
கேஷ் ஆன் டெலிவரி செய்யுங்கள்
எனினும் அவ்வப்போது இந்த உணவு டெலிவரி குறித்து வாடிக்கையாளர்கள் சில அதிர்ச்சியான பதிவுகளும் பரவி வருகின்றது. தற்போதும் இது போன்றாதொரு பதிவினை வினய் சாத்தி என்ற நபர் தனது லிங்க்ட் இன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபல உணவகம் ஒன்றில் அவர் பர்கர் ஆர்டர் செய்தேன். அந்த ஆர்டரை டெலிவரி செய்ய வந்த ஊழியர் ஒருவர், நீங்கள் 700 - 800 ரூபாய் மதிப்பிலான உணவினை ஆர்டர் செய்தால், ஆன்லைனில் பே செய்ய வேண்டாம். நீங்கள் கேஷ் ஆன் டெலிவரியை தேர்வு செய்யுங்கள். அப்படி தேர்வு செய்தால் என்னிடம் 200 ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு, உங்கள் ஆர்டரை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.
இப்படியும் மோசடியா?
நான் நீங்கள் உணவை வாங்க மறுத்துவிட்டீர்கள் என கணக்கு காட்டிவிடுவேன். நீங்கள் 200 ரூபாய் பே செய்தால் போதும் என கூறியுள்ளார். இந்த பதிலை கேட்டு அதிர்ந்த வினய், இந்த மோசடியை சமூக வலைதளத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். கேஷ் ஆன் டெலிவரி மூலம் அந்த பணத்தை எடுத்துக் கொள்ளும், இந்த மோசடியை நிறுவனத்திற்கும் சமூக வலைதளத்தின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
நடவடிக்கை எடுக்கப்படும்
இது ஒரு நல்ல ஆஃபர் தான் என்றாலும், தானும் ஒரு வணிகர் என்பதால் மோசடியை தெரியபடுத்த முடிவெடுத்ததாகவும் வினய் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இது குறித்து தீபிந்தர் கோயல் தீவிர நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இப்பிரச்சனையை தடுப்பதற்கான முயற்சியில் கவனம் செலுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications