இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகமான நேரத்தைச் சேமிக்க விரும்புகின்றனர். வேலை, போக்குவரத்து சிக்கல், நேர பற்றாக்குறை போன்ற காரணங்களால் உணவகத்திற்குச் சென்று சாப்பிடுவது என்பது அனைவருக்கும் சாத்தியமில்லாத விஷயம். இதனால், பலரும் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வது என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சோமேட்டோ தான்.
Zomato நிறுவனம், மக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் உணவுகளை ஆர்டர் செய்து வீடுகளுக்கு கொண்டுவரும் சேவையை வழங்கி வருகிறது. இந்தியா மட்டுமின்றி, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் தனது சேவைகளை விரிவாக்கம் செய்துள்ளது. இந்நிலையில், சோமேட்டோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான தீபிந்தர் கோயல், ஹரியானா மாநிலம் குருகிராமில் அமைந்துள்ள DLF The Camellias எனும் சிறப்பு வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு 'சூப்பர் லக்ஸரி' அபார்ட்மெண்ட்டை ரூ.52.3 கோடிக்கு வாங்கியிருக்கிறார். சமீபத்தில் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் சிஇஓ, நிறுவனர்கள், CXO அதிகாரிகள் ஆடம்பர வீடுகளை அதிகமாக வாங்கி வருகின்றனர். இந்த வரிசையில் சோமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல்-ம் இணைந்துள்ளார்.

இந்த சொத்தின் கடந்த மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பதிவு ஆவணங்கள் கூறுகிறது. இந்த சொத்து பதிவு செய்வதற்காக, அரசுக்கு கட்ட வேண்டிய வரியாக ரூ.3.66 கோடி செலுத்தியுள்ளதாக Zapkey என்ற ரியல் எஸ்டேட் அனலிட்டிக்ஸ் நிறுவனம் வெளியிட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது. The Camellias என்பது உயர்தர வசதிகள் கொண்ட பிரம்மாண்டமான குடியிருப்பு ஆகும். மேற்கண்ட தொகைகள் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் தற்போதைய ரியல் எஸ்டேட் முதலீடுகளை எவ்வளவு முக்கியத்துவத்துடன் கருதுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இந்த அபார்ட்மெண்ட் 10,813 சதுர அடி கொண்டதாகும். தற்போது இதன் மதிப்பு ரூ.100 கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இது, குருகிராமில் உள்ள உயர்ந்த நிலத்திலும், விருப்பமான இடத்திலும் சொத்து முதலீட்டுகள் எவ்வளவு விலை உயர்வு பெறுகின்றன என்பதற்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
சோமாடோ நிறுவனர் தீபிந்தர் கோயல் வாங்கிய 'சூப்பர் லக்ஸரி' குடியிருப்பு திட்டமாகும். இது செழுமையான வாழ்க்கை முறையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஐந்து நட்சத்திர ஹோட்டல் தரத்தில் உள்ள வசதிகள் மற்றும் உலகத் தரமான அமைப்புகளுக்காக பிரபலமானது. தனிப்பட்ட கிளப் ஹவுஸ், ஹெல்த் கிளப், ஹை-எண்ட் பாதுகாப்பு வசதிகள், ஸ்பா, மூலிகை தோட்டம் மற்றும் சாலை வசதிகளை உள்ளடக்கியுள்ளது.
DLF The Camellias என்பது வசதிகள், தனித்தன்மை வாய்ந்த கட்டுமானங்கள், உயர்தர வாடிக்கையாளர்களை ஈர்க்கும் காரணமாக, மதிப்புள்ள சொத்துக்களை வாங்கவும், விற்கவும் இந்நிறுவனம் பிரபலமானவையாக உள்ளது. தீபிந்தர் கோயல், தொழில்முனைவோர் மட்டுமல்ல. சூப்பர் லக்ஸரி கார்கள் மீது அதிக விருப்பம் கொண்டவர். அவர் Lamborghini Huracan Sterrato, Aston Martin DB12, Ferrari Roma, Porsche 911 Turbo S, Lamborghini Urus, BMW M8 Competition, Porsche Carrera S ஆகிய கார்களை வைத்துள்ளார்.
DLF The Camellias-இல் தீபிந்தர் கோயல் வாங்கியிருக்கும் சூப்பர் லக்ஸரி குடியிருப்பு தற்போது செல்வந்தர்கள் மற்றும் பிரபலங்களின் புதிய முகவரியாக உருவெடுத்துள்ளது. அதி நவீன வசதிகளும், தனியுரிமையும் கொண்ட இந்த இடம், NCR (National Capital Region) பகுதியில் உள்ள மிகவும் விருப்பமான சொத்தாக கருதப்படுகிறது. 2024 டிசம்பரில், இன்ஃபோ-எக்ஸ் சாப்ட்வேர் டெக்னாலஜி (Info-X Software Technology) என்ற ஐடி நிறுவனத்தின் CEO மற்றும் நிறுவனர் ரிஷி பார்டி, இங்கு ஒரு பிரமாண்ட பென்ட் ஹவுஸ் சொத்தை ரூ.190 கோடிக்கு வாங்கியிருந்தார்.
2024 ஜனவரியில், Wesbok Lifestyle நிறுவனத்தின் இயக்குநர் ஸ்மிதி அகர்வாலும், V Bazaar நிறுவனத்தின் CMD ஹேமந்த் அகர்வாலின் மனைவி, இந்த இடத்தில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றை ரூ.95 கோடிக்கு வாங்கியுள்ளனர். DLF The Camellias சூப்பர் லக்ஸரி குடியிருப்பில், 2023 அக்டோபரில் 11,000 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு அபார்ட்மெண்ட் மறுபரிவர்த்தனை மூலம் சுமார் ரூ.114 கோடிக்கு விற்பனைக்கான வாய்ப்பு பெற்றது. மேலும், இங்கு பல பிரபல தொழில்முனைவோர் மற்றும் நிறுவனத் தலைவர்கள் அபார்ட்மெண்ட்கள் வாங்கி உள்ளனர். MakeMyTrip நிறுவனர் தீப் கல்ரா, Den Networks நிறுவனத்தின் தலைவரான சமீர் மஞ்சந்தா, Assago Group நிறுவனத்தின் நிறுவனர் ஆஷிஷ் குர்ணானி ஆகியோரும் வாங்கியுள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications