இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமாக இருக்கும் சோமேட்டோ, குவிக் காமர்ஸ் நிறுவனமான பிளிங்கிட் ஆகியவற்றின் தாய் நிறுவனமாக இருக்கும் இடர்னல் நிறுவனத்தின் CEO ஆக இருக்கும் தீபிந்தர் கோயல் பிப்ரவரி 1, 2026 முதல் ராஜினா செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தீபிந்தர் கோயல் இடத்தில் இவருக்குப் பதிலாக பிளிங்கிட் CEO அல்பிந்தர் திந்த்சா புதிய சிஇஓ ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 21 அன்று நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சோமேட்டோ தனது பங்குதாரர்களுக்கு அளித்த கடிதத்தில் தீபிந்தர் கோயல் தனது ராஜினாமா செய்வதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். "சமீப காலமாக அதிக ஆபத்துக்கள் கொண்ட புதிய ஐடியாவால் ஈர்க்கப்பட்டுள்ளேன். இந்த ஐடியா அனைத்தும் பெரிய அளவிலான சோதனை மற்றும் ஆய்வுகளை உள்ளடக்கியவை என்பதால் இதை நிறுவனத்திற்கு வெளியில் இருந்து இயக்குவது தான் சரி.
இடர்னல் போன்ற பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனத்தில் இவற்றை செயல்படுத்துவது சரியல்ல. இந்த யோசனைகள் இடர்னலின் தற்போதைய வர்த்தகம், செயல்பாடுகளுடன் பொருந்தினால் நிறுவனத்திற்குள் செயல்படுத்தியிருப்பேன். ஆனால் இவை நிறுவனத்தின் செயல்பாடுகள் உடன் பொருந்தவில்லை. இடர்னல் கீழ் இருக்கும் வர்த்தகத்தை நிலையான வளர்ச்சி பாதையில் நிறுத்தவும், புதிய முயற்சியில் இருந்து வரும் ஆபத்துக்களை கப்பாற்ற இது தான் சரியானதாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
இந்த மாற்றம் நிறுவனத்தின் வளர்ச்சி உத்தியை பாதிக்காது என்று இடர்னல் தெரிவித்துள்ளது. திந்த்சாவின் நியமனம் நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிளிங்கிட் CEO அல்பிந்தர் திந்த்சா சோமேட்டோ உடன் இணைந்த நாளில் இருந்து பணியாற்றி வரும் காரணத்தால் இந்த மாற்றம் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது.
2008ல் தீபிந்தர் கோயல் மற்றும் பங்கஜ் சந்தா ஆகியோர் இணைந்து Foodiebay என்ற நிறுவனத்தை உருவாக்கினர். இந்த நிறுவனத்தின் பணி என்னவென்றால் ஒரு ஹோட்டலில் இருக்கும் மெனு, விலை பட்டியலை, ரிவ்யூ ஆகியவற்றை ஆன்லைனில் கொண்டு வருவது தான் பிஸ்னஸாக இருந்தது. இந்த நிறுவனம் Eternal தான் தற்போது Zomato (ஆன்லைன் உணவு டெலிவரி), Blinkit (குவிக் காமர்ஸ்), Hyperpure (B2B உணவு பொருட்கள் டெலிவரி), and District (டிக்கெட் புக்கிங்) என மாபெரும் சாம்ராஜ்ஜியமாக வளர்ந்துள்ளது.
Eternal பங்கு வலை இன்று வர்த்தக முடிவில் 4.90 சதவீதம் உயர்ந்து 282.80 ரூபாயாக உள்ளது, இதன் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 2.57 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications