சோமாட்டோ நிறுவனம் ஒரு கிரவுடு சப்போர்ட்டட் பருவநிலை கண்காணிப்பு சேவை செய்யும் WeatherUnion.com என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது.
இதற்கான அறிவிப்பை அதன் நிறுவனர் தீபிந்தர் கோயல் வெளியிட்டுள்ளார்.

நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு 650 பூமி பருவநிலை மையங்களைக் கொண்ட தனியார் நெட்வொர்க்காக இது விளங்கும்.
இதன்மூலம் பருவநிலை தொடர்பாக வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம், மழையளவு போன்ற உள்ளூர் சார்ந்த, ரியல் டைம் தகவல்கள் பெறப்படும்.
பருவநிலை மையங்களில் இருந்து கிடைக்கும் இந்த டேட்டாக்கள் பருவநிலை தொடர்பான நிறுவனங்கள், ரிசர்ச் இன்ஸ்டிடியூட்களுக்கு மிகவும் முக்கியமாகப் பயன்படும். இதற்காக தில்லி ஐஐடியின் சென்டர் ஃபார் அட்மாஸ்பெரிக் சயின்சஸ் உடன் சோமாட்டோ கூட்டு சேர்ந்துள்ளது.
இதன்மூலம் WeatherUnion.com சிஸ்டம் மேம்படுத்தப்படும். மேலும் இந்த முயற்சியினால் இன்னும் நிறைய நிறுவனங்களும் இன்ஸ்டிடியூட்களும் பயன்பெறும்.
இதுபற்றி தீபிந்தர் கோயல் கூறுகையில், ரியல்டைம் பருவநிலை தகவல்களை வைத்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையைத் தருவதற்கான நல்ல வணிக முடிவுகளை சோமாட்டா எடுக்க உபயோகமாக இருக்க முடியும். எனவே இதற்காக ஒரு தீர்வை உருவாக்க நாங்கள் தயாரானோம் என்றார்.
இந்த பருவநிலை டேட்டாக்களை அனைத்து இன்ஸ்டிடியூட்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சோமாட்டோ இலவசமாக வழங்க உள்ளது.
இந்த டேட்டாக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
ஆனால் சோமாட்டோ ஒரு நன்றிக்கடனாக மக்களுப் பயன்படும் வகையில் இதை யார்வேண்டுமென்றாலும் பயன்படுத்துவதற்கு அனுமதித்துள்ளது. இந்த ரியல் டைம் பருவநிலை டேட்டா மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நிறுவனங்களும் இன்ஸ்டிடியூட்களும் பயன்படுத்த வேண்டும் என்றார் கோயல்.
இந்த சேவையில் பருவநிலை உபகரணங்கள் ரியல் டைம் உள்ளூர் டேட்டாக்களை பதிவு செய்யும். மெஷின் லேர்னிங் மாடல்கள் இந்த டேட்டாக்களை நெட்வொர்க்குக்குத் தகுந்தபடி பிராசஸ் செய்யும்.
டெலிவரி பார்ட்னர்கள் இந்த தகவலைப் பெற்று சிறப்பாக பணியாற்றுவார்கள். எந்தவித பருவநிலைக்கும் ஏற்றபடி அவர்கள் தங்களைத் தயார் செய்வதற்கு இது உதவும்.
வழக்கமற்ற பருவநிலையின் போதும் நிறைய டெலிவரி பார்ட்னர்கள் வாடிக்கையாளர்களுக்கு பணிபுரிவதற்கு உதவும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு அதிக எண்ணிக்கையில் ரெஸ்டாரென்ட் சாய்ஸ் கிடைக்கும்.
இதுமட்டுமல்லாமல் ரியல் டைம் பருவநிலை டேட்டாக்களை வைத்து ஓலா போன்ற வாகன நிறுவனங்கள், இ-காமர்ஸ், ஹாஸ்பிடாலிட்டி, லாஜிஸ்டிக்ஸ், உணவு டெலிவரி, டிராவல், ரியல் எஸ்டேட், இன்சூரன்ஸ், விமானப் போக்குவரத்து நிறுவனங்களும் பயன்படுத்தலாம்.
Story written by: I.jayachandran
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications