இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமோட்டோ தனது வர்த்தக விரிவாக்கத்திற்காக முதலீடு ஈட்ட திட்டமிட்டு சில வாரங்களுக்கு முன் சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா-வின் முதலீட்டு நிறுவனமாகச் செயல்படும் Ant பைனான்சியல் நிறுவனத்திடம் இருந்து 100 மில்லியன் டாலர் அளவிலான தொகையை ஈட்ட முடிவு செய்தது.
இதன் பின் இந்திய - சீன பிரச்சனை வெடித்தது, இதன் எதிரொலியாக இந்திய அரசு சீன முதலீடுகளைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டு முதலீடு விதிகளை மாற்றியது. இதனைத் தொடர்ந்து சோமேட்டோ தனது முடிவை மாற்றியுள்ளது.
தற்போது சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான Temasek உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
Temasek உடன் பேச்சுவார்த்தை
நாளுக்கு நாள் இந்தியா சீனா இடையேயான பிரச்சனை பெரியதாகி வரும் நிலையில், சீனாவில் இருந்து முதலீடு வரும் வரையில் காத்திருக்க முடியாது என முடிவு செய்துள்ள சோமேட்டோ சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான Temasek உடன் 100 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைப் பெற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிறுவனம் ஏற்கனவே சோமேட்டோவில் முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சோமேட்டோ
இந்தக் கொரோனா காலத்தில் சோமேட்டோவின் வர்த்தகம் அதிகளவில் பாதித்துள்ளதாகவும், புதிய நிறுவனமான அமேசான் உணவு டெலிவரி சேவையில் இறங்கியுள்ள நிலையில் சந்தையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இதன் எதிரொலியாகவே வர்த்தக விரிவாக்கத்திற்காகச் சோமேட்டோ Ant பைனான்சியல் நிறுவனத்தின் முதலீட்டுக்காகக் காத்திருக்காமல் Temasek உடன் 100 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைப் பெற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கொரோனா
கொரோனா-வின் தாக்கம் இந்நிறுவனத்தின் லாப அளவீட்டையும், வர்த்தக அளவீட்டையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இதற்கு ஏற்றார் போல் ஏப்ரல் மாதம் மத்திய அரசு அன்னிய முதலீடு விதிகளை மாற்றியுள்ளது.
தற்போது சோமேட்டோ மற்றும் Temasek இடையிலான முதலீடு உறுதியான நிலையில், இருதரப்பு விதிகள் மற்றும் ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Temasek - சோமேட்டோ
சோமேட்டோ நிறுவனத்தில் 2015இல் Temasek பல்வேறு முதலீட்டாளர்கள் உடன் இணைந்து சுமார் 310 கோடி ரூபாய் முதலீடு செய்ததில் தற்போது இந்நிறுவனத்திடம் சோமேட்டோவின் 3 சதவீத பங்குகள் உள்ளது.
இன்றைய மதிப்பில் சோமேட்டோவின் மதிப்பு 3 பில்லியன் டாலர்.
More From GoodReturns

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications