சென்னை: பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ (Zomato) திடீரென ஃபிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்தியாவில் வீட்டில் இருந்தபடியே நாம் நமக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து டெலிவரி பெற்றும் கொள்ளும் வசதி இருக்கிறது. சோமேட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன.
தற்போது பண்டிகை காலம் வர இருக்கும் சூழலில் திடீரென சோமேட்டோ நிறுவனம் தங்களுடைய செயலியில் தற்காலிகமாக பிளாட்பார்ம் கட்டணத்தை அதிகப்படுத்தியுள்ளது. தற்போது பிளாட்பார்ம் கட்டணம் ஒரு ஆர்டருக்கு 6 ரூபாய் என இருக்கும் நிலையில் அதனை 10 ரூபாய் என உயர்த்தியுள்ளது.

அதாவது ஏற்கனவே இருந்ததைவிட கிட்டத்தட்ட 60 % பிளாட்பார்ம் கட்டணத்தை டொமேட்டோ உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக சோமேட்டோ தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு நோட்டிஃபிகேசனை அனுப்பியுள்ளது.
சோமேட்டோ செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறிய பாப் அப் மூலம் பிளாட்பார்ம் கட்டண உயர்வு பற்றிய தகவல் அளித்து வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள நோட்டிபிகேஷனில் பண்டிகை காலத்தில் சிறப்பான சேவைகளை வழங்கவும், செயல்பாட்டு செலவுகளை ஈடு கட்டவும் இந்த கட்டண உயர்வு அவசியம் என சோமேட்டோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அதாவது இந்த கட்டணமானது பண்டிகை காலத்தில் சேவையை இயக்குவதற்கான கட்டணத்தை செலுத்த எங்களுக்கு உதவுகிறது, பண்டிகை காலங்களில் சேவைகளை தொடரவும் பிளாட்பார்ம் கட்டணத்தை சற்றே அதிகரித்துள்ளோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமேட்டோ நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டில் தான் முதன்முறையாக பிளாட்பார்ம் கட்டணம் என்ற ஒரு புதிய கட்டணத்தை அறிமுகம் செய்தது. அப்போதிலிருந்து தற்போது வரை படிப்படியாக பிளாட்பார்ம் கட்டணத்தை சோமேட்டோ உயர்த்தி வருகிறது. தற்போது அதனை 10 ரூபாய் என அதிகரித்துவிட்டது. சோமேட்டோ நிறுவனம் 2023இல் பிளாட்பார்ம் கட்டணத்தை அதிகரித்து அறிவித்ததில் இருந்து அதன் போட்டி நிறுவனமான ஸிவிக்கியும் பிளாட்பார்ம் கட்டணத்தை அறிவித்தது.
தற்போது ஸ்விக்கியை பொருத்தவரை ஒரு ஆர்டருக்கு ரூ. 6.50 ஐ பிளாட்பார்ம் கட்டணமாக வசூலிக்கிறது. பிளாட்பார்ம் கட்டணம் என்பது ஒவ்வொரு உணவு ஆர்டர்களுக்கும் அந்த உணவுக்கான கட்டணம் ,ஜிஎஸ்டி மற்றும் டெலிவரி கட்டணம் ஆகியவற்றின் மீது கூடுதலாக விதிக்கப்படக் கூடிய ஒரு கட்டணமாகும்.
இந்தியாவில் ஒரு நாளைக்கு சுமார் 20 லட்சம் முதல் 25 லட்சம் உணவு ஆர்டர்கள் இதுபோன்ற செயலிகள் வாயிலாக பெறப்படுகின்றன. இதுபோல பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் இந்த நிறுவனங்களின் வருவாய் கணிசமான அளவு அதிகரிக்கிறது. அதுவும் தீபாவளி பண்டிகை காலத்தில் அதிகளவில் ஆர்டர்கள் கிடைக்கும் என்பதால் சோமேட்டோ இப்படி கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications