சோமாட்டோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் கட்டணத்தில் 25 சதவீதத்தை உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இப்புதிய கட்டணம் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து விட்டது. இந்தத் தகவல் சோமாட்டோ நிறுவனத்தின் ஆப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாட்டோ நிறுவனம் தினமும் 20 லட்சம் முதல் 22 லட்சம் ஆர்டர்களை டெலிவரி செய்து வருகிறது. பெரிய ஆர்டருக்கு ரூ.1 உயர்த்தினால்கூட அதன் காலாண்டு லாபம் கணிசமாக எகிறிவிடும். ஜனவரி மாதத்தில் வாடிக்கையாளர்களுக்கான கட்டணத்தை ரூ.3லிருந்து ரூ.4 ஆக உயர்த்தியது.

இதுபற்றி எந்த விளக்கமும் அளிப்பதற்கு சோமாட்டோ நிறுவனம் மறுத்துவிட்டது.
சோமாட்டோவின் போட்டி நிறுவனமான ஸ்விக்கி தனது உணவு டெலிவரிகளுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கிறது. சோமாட்டோ நிறுவனம் இந்தக் கட்டணத்தை டெலிவரி சார்ஜ்ஜுடன் கூடுதலாக வசூலிக்கிறது.
சோமாட்டோ லாயல்டி புரோகிராம் உறுப்பினர்களுக்கு இந்த கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உணவுக்கான கட்டணத்தை மட்டும் வசூலித்துவிட்டு டெலிவரியை இலவசமாகவும் தள்ளுபடிகளையும் வழங்குகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த பிளாட்பார்ம் கட்டணம் சோமாட்டோ கோல்டு மெம்பர்களுக்கும் பொருந்தும்.
2023 ஆகஸ்ட்டில் இந்த கட்டணத்தை சோமாட்டோ விதித்தது. ஒரு ஆர்டருக்கு ரூ.2 தொடக்கத்தில் விதிக்கப்பட்டது. அதே ஆண்டு அக்டோபரில் இந்த கட்டணத்தை ரூ.3 ஆக உயர்த்தியது.
சோமாட்டோவின் விரைவு பிளாட்பார்மான பிளிங்கிட் ஹேண்டிலிங் சார்ஜாக ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.2 வசூலிக்கிறது. ஜனவரியில் பிளாட்பார்ம் கட்டணத்தை சோமாட்டோ நிறுவனம் அதிகரித்த பின்னர் அந்த நிறுவனத்தின் வரியை சமாளிக்க உதவும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இது ஜிஎஸ்டி வரியில் ரூ.402 கோடி ஆகும்.
சோமாட்டோ நிறுவனம் தொடர்ச்சியாக மூன்று காலாண்டுகளுக்கு லாபத்தை ஈட்டியுள்ளது. அக்டோபர்- டிசம்பர் காலத்தில் ரூ.138 கோடியும், செப்டம்பர் காலாண்டில் ரூ.36 கோடியும் 2022 டிசம்பரில் முடிந்த காலாண்டில் ரூ.347 கோடியும் லாபம் பெற்றுள்ளது.
சோமாட்டோ நிறுவனம் இன்டர்சிட்டி டெலிவரி சேவையை நிறுத்தி விட்டது. அதில் பல்வேறு சட்டச் சிக்கல்களை சோமாட்டோ நிறுவனம் சந்தித்தது.
2022இல் அறிமுகப்படுத்தப்பட்ட இன்டர்சிட்டி டெலிவரி சேவை தொடக்கத்தில் சில நகரங்களில் உள்ள குறிப்பிட்ட ரெஸ்ட்டாரென்ட்களில் இருந்து உணவு சப்ளையை செய்தது.
பிற நகரங்களில் இருந்து முன்னரே ஸ்டாக் செய்யப்பட்ட உணவுகளை குறித்த நேரத்தில் டெலிவரி செய்வதற்காக இந்தச் சேவையை சோமாட்டோ நிறுவனம் மாற்றியமைத்தது.
தொடக்கத்தில் உணவுகள் மறுநாள்தான் டெலிவரி செய்யப்படும். ஆனால் இது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை திருப்தி செய்யவில்லை.
உடனடி பசியைத் தீர்க்கும் வகையில் இந்த சேவையை நிறுவனம் வழங்கவில்லை என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
இன்டர்சிட்டி சேவை மட்டுமல்லாமல் ஒரு நகரத்தில் தொலைதூரத்தில் உள்ள இடத்தில் இருந்து உணவு டெலிவரியை செய்யவும் சோமாட்டோ நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
இதுமட்டுமல்லாமல் மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்தும் உணவு டெலிவரியை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்தத் திட்டம் செயல்முறைக்கு வரவேயில்லை. இன்டர்சிட்டி டெலிவரி சர்வீஸை தொடங்கிய மூன்றே மாதங்களுக்குள் இந்த சேவைக்குத் தலைவராக இருந்த சித்தார்த் ஜாவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதுதில்லியைச் சேர்ந்த ஒருவர் சோமாட்டோ நிறுவனத்தின் மீது ஒரு வழக்கைத் தொடர்ந்தார். அதில் பிற நகரங்களில் உள்ள பிரபலமான ரெஸ்ட்டாரென்ட்களில் இருந்து உணவை டெலிவரி செய்வதாக சோமாட்டோ உறுதி அளித்ததாகவும் ஆனால் முன்னரே ஸ்டாக் செய்யப்பட்டு வைத்திருந்த உணவை டெலிவரி செய்ததாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
Story written by: I.jayachandran


Click it and Unblock the Notifications