இந்திய உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி நிறுவனமான சோமாட்டோ இப்போது பெர்சனலைஸ்டு போட்டோ கேக்குகளை தனது ஆப்பில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கேக்குகளைப் பெறுவற்காக முன்கூட்டியே கேக் ஆர்டர் செய்ய வேண்டியதில்லை. வழக்கம்போல ஆர்டர் செய்தவுடன் குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்யப்படும்.
இந்த கேக்குகள் 45 முதல் 60 நிமிடங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு சோமாட்டோ டெலிவரி செய்துவிடும்.

பெர்சனலைஸ்டு கேக்குகளைப் பெறுவதற்கு இப்படி ஆர்டர் செய்யவேண்டும்:
1. ஆப்பில் "போட்டோ கேக்ஸ்" என்பதை தேடவும்.
2. பேக்கரி/ரெஸ்டாரண்ட்டை அங்குள்ள பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.
3. உங்களுடைய ஃபிளேவர் மற்றும் எடையை தேர்வு செய்யவும்.
4. கேக்கின் மீது வரும் போட்டோவை அப்லோடு செய்யவும்.
5. போட்டோ கேக்கின் பிரிவியூவை பார்க்கவும்.
6. ஆர்டர் செய்யவும்
7. அவ்வளவுதான்! டெலிவரிக்கு காத்திருங்கள்.
இந்த புதிய அம்சம் அன்னையர் தினத்தை முன்னிட்டு மே 12ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். அதன் பின்னரும் தொடர்ந்து இருக்கும். கடந்த ஆண்டு அன்னையர் தினத்தின்போது ஒரு நிமிடத்துக்கு 150 கேக்குகள் ஆர்டர் செய்யப்பட்டதாக சோமாட்டோ தெரிவித்துள்ளது.
சோமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயலும் இந்த அறிவிப்பை சமூக தளமான எக்ஸில் வெளியிட்டுள்ளார். அதில் இன்று மனதுக்குப் பிடித்தமான போட்டோ கேக்குகளை உங்களது சோமாட்டோவில் பெறலாம். உங்களது போட்டோவை அப்லோடு செய்து கேக்குகளை கஸ்டமைஸ்டு செய்யலாம். 30 நிமிடங்களுக்குள் அந்த கேக் டெலிவரி செய்யப்பட்டுவிடும் எனக் கூறியுள்ளார்.
இந்த சிறப்பு சலுகை இப்போது தில்லி என்சிஆர் பகுதியில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் கிடைக்கிறது. விரைவில் மற்ற நகரங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என சோமாட்டோ அறிவித்துள்ளது.
அன்னையர் தினத்துக்காக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் இணைந்து செயல்படும் எங்களது ரெஸ்டாரண்ட் பார்ட்னர்களுக்கு மிக்க நன்றி என்று கோயல் கூறியுள்ளார்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications