சொமேட்டோ (Zomato) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தீபிந்தர் கோயல், நிறுவனங்களின் உணவு செலவுகளை சமாளிக்கும் வகையில் ஒரு புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். கார்ப்பரேட் ஆர்டர்களில் முக்கியமாக கவனம் செலுத்தும் வகையில், "Zomato for Enterprise" என்ற தளம் ஆகஸ்ட் 28-ஆம் தேதியான இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த தளம் நிறுவனங்களில் ஊழியர்களைச் சேர்க்கவும், வரவு செலவுத் திட்டங்களை அமைக்கவும், உணவு ஆர்டர் செய்யும் விதிகளை வரையறுக்கவும் உதவும் என்றும் கூறப்படுகிறது.
தீபிந்தர் கோயல் தனது அதிகாரப்பூர்வ X தளம் மூலம் "Zomato for Enterprise" என்ற புதிய தளத்தை அறிவித்தார். அதில் அவர், "உணவு செலவுகளை நிர்வகிக்க நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட தளமான Zomato for Enterprise (ZFE)-ஐ அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கார்ப்பரேட் ஊழியர்களால் செய்யப்படும் பல சோமாட்டோ ஆர்டர்கள் வணிகம் சார்ந்தவை, நிறுவனத்தால் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியவை. சில சமயங்களில், இந்த திருப்பிச் செலுத்தும் செயல்முறை சிக்கலானதாகவும் நேரத்தை எடுத்துக்கொள்பதாகவும் இருக்கும். இருப்பினும், ZFE உடன், பணியாளர்கள் தங்கள் வணிக ஆர்டர்களை நேரடியாக தங்கள் முதலாளியிடம் பில் மூலமாக அனுப்ப முடியும்.
நிறுவனங்கள் ஊழியர்களைச் சேர்க்க, வரவு செலவுத் திட்டங்களை அமைக்க, விதிகளை வரையறுக்க மற்றும் பலவற்றிற்கு ZFE-ஐப் பயன்படுத்தலாம். ZFE உங்கள் ஊழியர்களுக்கு வசதியைச் சேர்க்கிறது, மீதமுள்ளவற்றை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்.

100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே ZFE-ஐப் பயன்படுத்துகின்றனர். இந்த முயற்சியை வடிவமைக்க உதவியவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம். உங்கள் நிறுவனத்திற்கு ZFE-ஐ முயற்சி செய்து பார்ப்பதற்கு அனைத்து கார்ப்பரேட் நிறுவன தலைவர்களையும் அழைக்கிறோம். தொடங்குவதற்கு [email protected] என்ற மெயில் ஐடியை தொடர்புகொள்ளவும் என்று எழுதியுள்ளார்.
Zomato for Enterprise (ZFE) என்பது நிறுவனங்களின் உணவுச் செலவுகளை திறமையாகக் கையாளும் ஒரு புதிய தளமாகும். ZFE-ஐப் பயன்படுத்தி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைச் சேர்க்கலாம், பட்ஜெட்டை அமைக்கலாம் மற்றும் ஆர்டர் செய்வதற்கான விதிகளை வரையறுக்கலாம். இது நிறுவனங்களுக்கு நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஒவ்வொரு சேவைக்காகவும் நாம் ஒவ்வொரு சாப்ட்வேர்களை பயன்படுத்துகிறோம். அந்த வகையில் நிறுவனங்களில் உணவு செலவுகளை எளிதாக்கும் இந்த சேவைக்கு நிறுவனங்களின் மத்தியில் வரவேற்பு கிட்டுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications