இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமோட்டோ ஐபிஓ வாயிலாக மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது.
இந்நிறுவன ஐபிஓ மீது கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், கிரே மார்கெட் சந்தையில் இதன் ப்ரீமியம் விலை மீது சில விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் முதலீட்டாளர்கள் மத்தியில் எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
சோமேட்டோ ஐபிஓ
சோமேட்டோ நிறுவனம் இந்த ஐபிஓ மூலம் 9,375 கோடி ரூபாய் ஈர்க்க திட்டமிட்டுள்ளது, மாபெரும் ஐபிஓ என்றாலும் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு வெறும் 10 சதவீத பங்குகளை மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள காரணத்தால் டிமாண்ட் அதிகமாகியுள்ளது.
ரீடைல் முதலீட்டாளர்கள்
ரீடைல் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள 10 சதவீத பங்குகளைச் சுமார் 4.49 மடங்கு அதிகமாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். மேலும் மொத்தமாகப் பங்குகளைச் சுமார் 2.25 மடங்கு அதிகமாக முதலீடு செய்துள்ளனர்.
முதலீடுகள் சரிவு
ஆனால் ஊழியர்களுக்கும் (0.26X), NII (0.37X) பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பங்குகளை மட்டும் மிகவும் குறைவாக முதலீடு செய்துள்ளனர். இது ப்ரீமியம் விலையைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனாலும் 10 சதவீதம் ப்ரீமியம் விலை நிச்சயம் கிடைக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.
ஜூலை 16 கடைசி நாள்
ஜூலை 16ஆம் தேதி தான் சோமேட்டோ ஐபிஓ-வில் முதலீடு செய்யக் கடைசி நாள். 72 முதல் 76 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படும் சோமேட்டோ பங்குகள் ஒரு ரீடைல் முதலீட்டாளர் 195 பங்குகள் கொண்ட 1 லாட் முதல் 13 லாட் வரையில் முதலீடு செய்ய முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications