ஆன்லைன் உணவு டெலிவரி வணிகத்தில் முன்னணியில் இருக்கும் சோமோட்டோ நிறுவனம், ஆண்ட் குழுமத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றது.
இந்த நிறுவனம் பொது பங்கு வெளியீட்டின் மூலம் 8,250 கோடி ரூபாய் வரை நிதி திட்டமிட்டுள்ளதாக தாக்கல் செய்துள்ளது.
இது குறித்த அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளில் ஆன்லைன் உணவு டெலிவரியில் கணிசமான வளர்ச்சியினைக் கண்டுள்ளது. கடந்த 2020ம் நிதியாண்டில் அதன் வருவாய் முந்தைய நிதியாண்டினை காட்டிலும் இருமடங்கு அதிகரித்து, 2,960 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சோமேட்டோ பற்றி?
கடந்த 2008ல் டெல்லியில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சமீபத்தில் தான் சோமேட்டோ நிறுவனம் 250 மில்லியன் டாலர் நிதியினை திரட்டியது. இந்த நிலையில் இந்த ஸ்டார்டப் நிறுவனத்தின் மதிப்பு 5.4 பில்லியன் டாலராகும். சோமேட்டோ நிறுவனம் பல ஆண்டுகளாக அதன் பங்கு வெளியீட்டினை திட்டமிட்டு வந்த நிலையில், தற்போது தான் இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது.
பெயர் மாற்றம்
இந்த பங்கு வெளியீடானது பெரிதும் எதிர்பார்ப்பட்டு வரும் நிலையில், அதற்காக தயாராகி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் தான் சோமேட்டோ லிமிடெட் என்றும் தனது பெயரை மாற்றியது. தற்போது சோமேட்டோ உணவகங்களுடன் இணைந்து வீட்டு பாணி உணவை உருவாக்கியுள்ளது. இது அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில் அதன் பயனர்களும் அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளது. குறிப்பாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எளிய உணவை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது.
எவ்வளவு நிதி?
இதற்கிடையில் சோமேட்டோ நிறுவனம் 8,250 கோடி ரூபாய் வரையிலான பங்குகளை விற்பனை மூலம் திட்டமிட்டுள்ளதாக பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் புதிய பங்கு வெளியீடு மூலம் 7,500 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும். அதே நேரம் அதன் முந்தைய முதலீட்டாளர் Info Edge மூலம் 750 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய எதிர்பார்ப்பு
எஸ்பிஐ கார்டு பொது பங்கு வெளியீட்டுக்கு பிறகு, இது மிகப்பெரிய பங்கு வெளியீடாகும். இன்று சுகாதாரம், தனி மனித இடைவெளி என பல கட்டுப்பாடுகளுக்கும் மத்தியில் மக்கள், இது போன்ற ஆன்லைன் நிறுவனங்களை நாடுவதால், இதன் வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இதன் பங்கு வெளியீடும் பெரிய அளவிலான எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications