இந்தியாவில் உணவு டெலிவரி மற்றும் குயிக் காமர்ஸ் நிறுவனங்களின் செயல்பாடு அதிகரித்துள்ளது. இதில் ஸோமேட்டோ நிறுவனம் தான் முன்னணியில் இருக்கிறது. ஸோமேட்டோ நிறுவனம் அடுத்தடுத்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது.
டெலிவரி பார்ட்னர்களுக்கு வாடகை வாகனம்: அந்த வகையில் தங்களுடைய டெலிவரி பார்ட்னர்களுக்கு இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் சேவையை ஸோமேட்டோ நிறுவனம் தொடங்கியுள்ளது. ஸோமேட்டோ நிறுவனம் முதல் கட்டமாக டெல்லியில் இந்த சேவையை கொண்டு வந்திருக்கிறது. இதன்படி தங்களிடம் டெலிவரி பார்ட்னராக வேலை செய்யக்கூடிய நபர்கள் தங்களுக்கு தேவையான இருசக்கர வாகனத்தை ஸோமேட்டோவிடம் இருந்தே வாடகைக்கு பெற்றுக் கொள்ள முடியும்.

மின்சார வாகனம் வாடகை: புதுமையாக சிந்தித்து மின்சார இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் பணியை கொண்டு வந்துள்ளது ஸோமேட்டோ. டெல்லியில் தற்போதைக்கு 300 மின்சார இரு சக்கர வாகனங்கள் மூலம் இந்த வாடகை பைக் சேவையை கொண்டு வந்திருக்கும் ஸோமேட்டோ கூடிய விரைவில் அனைத்து நகரங்களுக்கும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய இருப்பதாக தெரிவிக்கிறது.
ஸோமேட்டோ இலக்கு: தங்களுடைய தொழிலில் கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டை குறைப்பதற்கான இலக்குகளை நிர்ணயம் செய்திருப்பதாகவும் இதன் காரணமாகவே மின்சார வாகனங்களை டெலிவரி பார்ட்னர்களுக்கு வாடகைக்கு விடுவதாகவும் தெரிவித்திருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் தங்கள் நிறுவனத்தில் இருக்கும் அனைத்து டெலிவரி பார்ட்னர்களும் மின்சார வாகனங்களை பயன்படுத்துவார்கள் என அறிவித்துள்ளது.’
2 லட்சம் மரக்கன்றுகள் நட்டதற்கு சமம்: ஏற்கனவே ஸோமேட்டோவில் பணி புரியும் டெலிவரி பார்ட்னர்களில் 37 ஆயிரம் பேர் மின்சார வாகனங்களை பயன்படுத்துகின்றனர் என அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. இதன் மூலம் 4, 900 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியீடு நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் இது சுமார் 2 லட்சம் மரக்கன்றுகளை நட்டதற்கு சமம் என்றும் கூறியிருக்கிறது. உணவு டெலிவரி சேவைக்காகவே பிரத்தியேகமாக இந்த மின்சார பைக்குகள் வடிவமைக்கப்பட்டிருப்பதாக ஸோமேட்டோ நிறுவனம் கூறியிருக்கிறது.
டெல்லி தொடர்ந்து நாடு முழுவதும்: பசுமையான இந்தியாவிற்கு ஸோமேட்டோவும், டெலிவரி பார்ட்னர்களும் தங்களால் முயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டத்தை கொண்டு வந்திருப்பதாக ஸோமேட்டோவின் தலைமை அதிகாரிகளில் ஒருவரான அஞ்சலி ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார். முன்னதாக ஸ்விக்கி நிறுவனமும் தங்களுடைய டெலிவரி பாட்னர்களுக்கு இதுபோல மின்சார இரு சக்கர வாகனங்களை வழங்கும் திட்டம் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
டெலிவரி பார்டனர்களை பொறுத்தவரை மின்சார வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் பெட்ரோலுக்கு ஆகக்கூடிய செலவு குறைகிறது, பராமரிப்பு செலவு குறைகிறது என கூறியுள்ளனர். இனி வரும் நாட்களில் சாலைகளில் அதிக எண்ணிக்கையில் மின்சார வாகனங்களை பார்க்கலா


Click it and Unblock the Notifications