இந்தியாவின் மிகப்பெரிய உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ பங்குகள் இன்று காலை வர்த்தகத்தில் தடாலடியாக 5 சதவீதம் வரையில் உயர்ந்தது, இதற்கு முக்கிய காரணம் சோமேட்டோ நிறுவனத்தில் நடந்த பிளாக் டீல் தான்.
சோமேட்டோ நிறுவனத்தின் 10 கோடி பங்குகள் அதாவது மொத்த பங்குகளில் சுமார் 1.17 சதவீதத்தை ஒரு பங்கிற்கு சுமார் 94.70 ரூபாய் என்ற விலையில் மொத்தம் 947 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு உள்ளது. இந்த பங்குகளை ஜப்பான் சாப்ட்பேங்க் தலைமையிலான முதலீட்டு பிரிவான SoftBank's Svf Growth விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது.

சிங்கப்பூர்-ஐ சேர்ந்த SoftBank's Svf Growth நிறுவனம் சோமேட்டோ-வின் 3.42 சதவீத பங்குகளை வைத்துள்ளது, இது Blinkit கைப்பற்றலுக்கு பின்பு 12 மாத லாக்இன் கட்டுப்பாட்டிற்குள் சென்றது, இந்த கட்டுப்பாடு ஆகஸ்ட் 25 ஆம் தேதி முடிந்த நிலையில் தற்போது விற்பனை செய்துள்ளது. சோமேட்டோ Blinkit-ஐ கைப்பற்றும் போது இந்த 3.42 சதவீத பங்குகளை சாப்ட்பேங்க் பெற்றது.
இன்றைய வர்த்தகத்தில் சோமேட்டோ பங்குகள் 4.41 சதவீதம் உயர்வுடன் 98.82 ரூபாய் விலையில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இன்று அதிகப்படியாக 99.69 ரூபாய் வரையில் சோமேட்டோ பங்குகள் உயர்ந்துள்ளது, இதன் மூலம் அடுத்த சில நாட்களில் 100 ரூபாய் அளவீட்டை தாண்டுவது மட்டும் அல்லாமல் 102.85 ரூபாய் என்ற 52 வார உயர்வையும் தாண்டும் என கணிக்கப்படுகிறது.

இதேவேளையில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து சரிந்து வந்த ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருடாந்திர கூட்டத்தின் முடிவிற்கு பின்பு உயர துவங்கி கடந்த 2 நாட்களில் மட்டுமே 8 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 4.99 சதவீதம் உயர்ந்து அதன் அப்பர் சர்கியூட் அளவான 5 சதவீதத்திற்கு நெருங்கி 232.70 ரூபாய் விலையில் வர்த்தகமாகி வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருடாந்திர கூட்டத்தின் முடிவிற்கு முன்பு ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகளை வாங்க ஆள் இல்லாமல் இருந்த வேளையில் தற்போது விற்பனை செய்ய யாரும் இல்லாமல் உள்ளனர்.


Click it and Unblock the Notifications