இந்தியாவில் முன்னணி டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் செய்யும் விளம்பரம் அவ்வப்போது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்துகிறது, சில நாட்களுக்கு முன்பு ஹோலி பண்டிகைக்குச் செய்யப்பட்ட ஸ்விக்கி விளம்பரம் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து சோமேட்டோ பதிவிட்ட ஒரு வீடியோ டிவிட்டரில் பல ஆயிரம் மக்களைக் கோபப்படுத்தியுள்ளது.
சோமேட்டோ நிறுவனம் சமுக வலைத்தள பக்கத்தில் Kachra என்ற தலைப்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தது. இந்த வீடியோவில் பாலிவுட்-ல் மிகவும் புகழ்பெற்ற லகான் படத்தில் Kachra எனப் பெயர் கொண்ட ஒரு தலித் கதாபாத்திரம் இருக்கும். இந்த கதாபாத்திரத்தில் நடித்தவரையே சோமேட்டோ தனது Kachra (குப்பை எனப் பொருள்) வீடியோவில் நடிக்க வைத்திருந்தது.

சோமேட்டோ குப்பைகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பல புதிய விஷயங்களை உருவாக்க முடியும் என்பதை மைய கருத்தாக வைத்து உலக சுற்றுச்சூழல் தினத்திற்காக இந்த வீடியோவை உருவாக்கியது. லகான் பட கதாபாத்திரத்தில் நடித்தவரை குப்பை என்ற பொருள் கொண்ட வீடியோவில் நடிக்க வைத்தது பெரும் குற்றமாக பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் சோமேட்டோ சாதிய ரீதியில் இழிவுபடுத்தியுள்ளது என கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு #BoycottZomato என்ற ஹேஷ்டேக் உருவாகும் அளவுக்குப் பிரச்சனை பெரிதானது.

இதைத் தொடர்ந்து சோமேட்டோ இந்த வீடியோவுக்கு மன்னிப்பு கேட்டு விளக்கம் கொடுத்தது மட்டும் அல்லாமல் இந்த வீடியோவையும் நீக்கியுள்ளது. ஆனாலும் டிவிட்டரில் இந்த வீடியோ, மக்களின் கருத்து, வீடியோவின் புகைப்படங்கள் என குவிந்துக்கிடக்கிறது.
ஆனால் இந்த விளம்பரத்தில் பயன்படுத்திய கதாபாத்திரம், சொற்கள் ஆகியவற்றின் உள் பொருளைத் தெரியாமல் உருவாக்கியதன் மூலம் தற்போது பெரும் பிரச்சனையில் சிக்கியுள்ளது. சோமேட்டோ இந்த வீடியோவை நீக்கினாலும் டிவிட்டரில் சிலர் பதிவிட்டு உள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications