இந்தியாவில் உணவு டெலிவரி துறையில் சோமாட்டோ முன்னணியில் உள்ளது. அதன் நிறுவனர் தீபிந்தர் கோயல் தனது லிங்க்டுஇன் பக்கத்தில் டிஸ்ட்ரிக்ட் பை சோமாட்டோ எனும் புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக கடந்த வாரம் அறிவித்தார். இது லிங்க்டுஇன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெஸ்டாரன்ட், பப்கள், கபே துறையில் தனது செயல்பாடுகளை சோமாட்டோ விரிவுபடுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
ஒரு பதிவர், இந்தியாவின் பிராந்திய சுவையுள்ள உணவுகளை சோமாட்டோ குறிவைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு கேமிங் அம்சமாக இருக்கும் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். வேறு ஒருவர் டிஸ்ட்ரிக்ட் சோமாட்டோ மூலம் சிறப்பான பிரத்யேகமான உணவு விருந்தை சோமாட்டோ அளிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

இதுபோன்ற கருத்துகள் குவிந்தபடி இருப்பது ஒரு புறம் இருக்க டிஸ்ட்ரிக்ட் சோமாட்டோ சேவையின் லோகோ அதன் குயிக் காமர்ஸ் பிளாட்பார்மான ஜெப்டோவை பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது. அந்த லோகோவின் நீல நிறம் ஜெப்டோவை பிராண்டிங் செய்யப் போவதாக தெரிகிறது. உணவு டெலிவரி நிறுவனமான சோமாட்டோ இதன் மூலம் டிஸ்ட்ரிக்ட் என்ற புதிய ஆப்பை அறிமுகப்படுத்துகிறது.
உணவு டெலிவரியைத் தவிர குயிக் காமர்ஸ் பிசினஸ்ஸை விரிவுப்படுத்த இந்த புதிய ஆப்பை சோமாட்டோ பயன்படுத்த உள்ளது. கோயிங் அவுட் எனப்படும் டைனிங், மூவிஸ், ஸ்போர்ட்ஸ் டிக்கெட்டிங், லைப் பெர்பாமென்ஸ், ஷாப்பிங் என இது ஒரு ஒன்-ஸ்டாப் ஆப்பாக இருக்கும்.இந்த ஆப்பின் மூலம் சோமாட்டோவின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்று அதன் நிறுவனர் தீபிந்தர் கோயல் கூறியுள்ளார்.
மேலும் சோமாட்டோவும் பிளிங்கிட்டும் இதுவரை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு அவர்களின் தேவையைக் கொண்டு வந்தன. டிஸ்ட்ரிக்ட் ஆப் மூலம் கோயிங் அவுட் பிசினஸ்ஸுக்குள் விரிவுபடுத்தப்படும் என்று கோயல் கூறியுள்ளார். டிஸ்ட்ரிக்ட் போன்ற ஒன்-ஸ்டாப் ஆப் மூலம் மிகப் பெரிய அளவில் பிஸினஸ் டு கஸ்டமர்ஸ் வணிகத்தை சோமாட்டோ பெருக்கும் என்று தெரிகிறது.
புக்மைஷோ போன்ற தளங்களுக்கு இந்த டிஸ்ட்ரிக்ட் ஆப் போட்டியாக அமையும். ஸ்விக்கி, பிக்பாஸ்கெட் போல சோமாட்டோ ஒரு சூப்பர் ஆப்பை உருவாக்கவில்லை. அதற்கு பதிலாக டைனிங் அவுட் மற்றும் சோமாட்டோ லைப் பிசினஸ் பிரிவுகளை புதிய டிஸ்ட்ரிக்ட் ஆப்பில் இணைத்துள்ளது.
இந்த முக்கியமான முயற்சியின் மூலம் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை சிறப்பாக அமைக்க சோமாட்டோ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு கோயிங் அவுட் சேவைகளை சோமாட்டோ அளிக்கும்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications