கொரோனா பாதிப்பின் காரணமாக அனைவரும் வர்த்தகத்தை இழந்து மோசமான நிலையில் இருக்கும் இந்தக் காலத்தில் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமோட்டோ, மளிகை பொருட்களை ஆன்லைன் ஆர்டர் மூலம் டோர் டெலிவரி செய்யும் Grofers நிறுவனத்தைச் சுமார் 750 மில்லியன் டாலருக்குக் கைப்பற்றத் திட்டம் தீட்டுள்ளது.
இந்தியாவில் பல ஸ்டார்ட்அப் இண்டர்நெட் நிறுவனங்கள் வர்த்தகம் இல்லாமலும், முதலீடு இல்லாமல் இருக்கும் வேளையில் செலவுகளைக் குறைக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நேரத்தில் சோமேட்டோ-வின் கைப்பற்றல் அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சி மட்டுமே கொடுத்துள்ளது.
Grofers நிறுவனம்
இந்தியாவில் கொரோனா தாக்கம் ஏற்பட்ட நாள் முதல் Grofers நிறுவனத்தின் தேவை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது மட்டுமல்லாமல் வர்த்தகத்தின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தில் கடந்த சில வாரத்தில் மட்டும் சுமார் 750 மில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
இந்நிறுவன கைப்பற்றல் குறித்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சாப்ட்பேங்க்
Grofers நிறுவனத்தின் முக்கிய முதலீட்டு நிறுவனமாக இருக்கும் சாப்ட்பேங்க் தற்போது மிகப்பெரிய நிதி நெருக்கடியில் இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையிலும் இப்புதிய கூட்டணி நிறுவனத்தில் 100 முதல் 200 மில்லியன் டாலர் வரையிலான முதலீட்டை செய்யத் தயார் என்ற தகவல்களும் கிடைத்துள்ளது.
சோமேட்டோ மார்கெட்
கொரோனா தாக்கத்தின் காரணமாக உணவு டெலிவரி குறைந்த நிலையில், மளிகை பொருட்களை டோர் டெலவரி செய்யும் சோமேட்டோ மார்கெட் என்ற புதிய வர்த்தகத்தைச் சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்ட நிலையில், Grofers நிறுவனத்தைச் சோமேட்டோ கைப்பற்றினால் சோமேட்டோ மார்கெட் வாடிக்கையாளர்களுக்கும் Grofers டெலிவரி செய்யும்.
உபர் ஈட்ஸ்
Grofers நிறுவனத்தைச் சோமேட்டோ கைப்பற்றினால் அது 2வது மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும். சமீபத்தில் தான் இந்தியாவில் தனது உணவு டெலிவரி வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உபர் ஈட்ஸ் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தை முழுமையாகக் கைப்பற்றியது.
பிக்பேஸ்கட்
சோமேட்டோ இதற்கு முன் மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் பிக்பேஸ்ட் நிறுவனத்தை வாங்க முயற்சி செய்தது ஆனால் அது நடக்கவில்லை, இதேபோல் அமேசான் நிறுவனமும் பிக் பேஸ்கட் நிறுவனத்தைக் கைப்பற்ற முயற்சி செய்தது, ஆனால் அதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவா.. ஜப்பானா..
சீனாவின் அலிபாபா குழுமத்தின் Ant பைனான்சியல் நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கும் 3.2 பில்லியன் டாலர் மதிப்பிலான சோமேட்டோ, ஜப்பான் சாப்ட்பேங்க் முதலீட்டில் இயங்கும் 650 மில்லியன் டாலர் (கடைசி முதலீட்டுச் சுற்றில் இதன் மதிப்பு) மதிப்பிலான Grofers நிறுவனத்தைக் கைப்பற்றக் கடைசிக் கட்ட முயற்சியில் உள்ளது.
இந்திய இண்டர்நெட் நிறுவனத்தையும், அதன் வர்த்தகத்தையும் கைப்பற்ற இவ்விரு வெளிநாட்டு நிறுவனங்களும் மிகப்பெரிய போட்டியைப் போட்டு வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications