இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ உணவு சார்ந்த அனைத்து பிரிவுகளிலும் சேவை அளிக்க வேண்டும் என்பதற்காக 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் இதேவேளையில் பெரு நகரங்களில் புதுப் புதுச் சேவைகளை அறிமுகம் செய்து வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
சோமேட்டோ ஒருபக்கம் உணவு சார்ந்த சேவையை விரிவாக்கம் செய்து வரும் வேளையில் உணவு பொருட்கள், சமையல் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களின் விற்பனையை அதிகரிக்க Blinkit தளத்தை லாபகரமானதாக மாற்றத் தொடர்ந்து மறுசீரமைப்பு செய்தும் விரிவாக்கம் செய்தும் வருகிறது.

இந்த நிலையில் சோமேட்டோ நிறுவனத்தின் புட் டெலிவரி பிரிவின் தலைவரான ராகேஷ் ராஜன் இந்நிறுவனம் அறிமுகம் செய்யப்போகும் புதிய திட்டம் குறித்து முக்கியத் தகவலை வெளியிட்டு உள்ளார். சோமேட்டோ நிர்வாகம் தன்னிடம் இருக்கும் ரெஸ்டாரென்ட் பார்ட்னர்களிடம் இணைந்து கேட்டரிங் சேவையைத் துவங்கி அதிகப்படியான உணவு ஆர்டரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி சேவை அளிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
உதாரணமாக வீட்டில் 20 உறவினர்கள் வருகிறார்கள், வீட்டில் சிறிய பார்ட்டி, பார்க்கில் சின்னப் பர்த்டே பார்ட்டி, சிறிய பிக்னிக் இப்படிப் பல காரணத்திற்காக உணவுகளை அதிகளவில் ஆர்டர் செய்யும் தேவை மக்கள் மத்தியில் உள்ளது. இதைப் பூர்த்திச் செய்வதற்காக சோமேட்டோ தளத்தில் புதிதாகக் கேட்டரிங் சேவை அளிக்க உள்ளோம் என ராகேஷ் ராஜன் தெரிவித்தார்.
இப்படிச் சோமேட்டோ தனது வாடிக்கையாளர்களுக்குக் கோல்டு மற்றும் loyalty programme மூலம் பல புதிய சேவைகளை அளிக்கத் தயாராகி வருகிறது. இதன் மூலம் சோமேட்டோ நிறுவனத்தின் லாபம் குறைய வாய்ப்புகள் உள்ளது ஆனாலும் உணவு சேவையில் அனைத்து சேவைகளையும் அளிக்க வேண்டும் என்ற முடிவுடன் உள்ளது சோமேட்டோ.
சமீபத்தில் சோமேட்டோ நிறுவனம் multi-cart சேவையை அறிமுகம் செய்தது, இதில் ஒரு வாடிக்கையாளர்கள் சோமோட்டோ ஆப்-ல் இருந்து ஒரே நேரத்தில் பல ரெஸ்டாரென்ட்-களில் இருந்து ஆர்டர் செய்ய முடியும். இதேபோல் இந்த வருட துவக்கத்தில் Zomato Everyday என்ற தனிப்பட்ட சேவையையும் கொண்டு வந்தது.
இவை அனைத்தும் அதிகப்படியான வர்த்தகத்தை ஈர்க்காவிட்டாலும், அனைத்துத் தரப்பு மக்களையும் ஈர்க்க முடியும். இதனால் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களைத் தனது தளத்தில் இணைத்து நீண்ட கால வளர்ச்சிக்கு அடித்தளமிட முடியும் என சோமேட்டோ நம்புகிறது.


Click it and Unblock the Notifications