இந்தியப் பங்குச்சந்தையை ஐபிஓ மூலம் கலக்கிய சோமேட்டோ நிறுவனம் செப்டம்பர் காலாண்டு முடிவில் அதிகப்படியான நஷ்டத்தைப் பதிவு செய்த நிலையில், இதைச் சமாளிக்க சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து பல நிறுவனத்தில் இதற்கான பேச்சுவார்த்தை மற்றும் முடிவுகளை எடுத்தாலும், மிக முக்கியமான ஒரு நிறுவனத்தின் சோமேட்டோ இதுவரை செய்யாத மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த முதலீட்டு மூலம் தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியும் எனச் சோமேட்டோ நம்புகிறது.
சோமேட்டோ
சோமேட்டோ நிறுவனம் இதுவரை உணவு டெலிவரியில் மட்டுமே இயங்கி வரும் நிலையில், சக போட்டி நிறுவனமான ஸ்விக்கி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி விற்பனையை நாட்டின் பல பகுதிகளில் விரிவாக்கம் செய்து வருகிறது. இதேபோல் இத்துறையில் ஓலா, உதான் ஆகிய நிறுவனங்களும் புதிதாக இறங்க முடிவு செய்துள்ளது.
மளிகை பொருட்கள் வர்த்தகம்
இந்நிலையில் சோமேட்டோ மிக முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளது. மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி விற்பனை பிரிவில் இறங்க பலமுறை முயற்சி செய்து தோற்றுப்போன சோமோட்டோ க்ராபர்ஸ் நிறுவனத்தில் சுமார் 500 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
க்ரோபர்ஸ் நிறுவனம்
இந்தப் பேச்சுவார்த்தை உறுதியாகும் பட்சத்தில் சோமேட்டோ நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடாக இது இருக்கும், மேலும் க்ரோபர்ஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 1.5 பில்லியன் டாலராக உயர உள்ளது. சமீபத்தில் க்ரோபர்ஸ் நிறுவனத்தில் சாப்ட்பேங்க் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் போது க்ரோபர்ஸ் 1 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டது.
500 மில்லியன் டாலர் முதலீடு
சோமேட்டோ க்ரோபர்ஸ் நிறுவனத்தில் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்தால் சுமார் 30 சதவீத பங்குகளைப் பெறும், அதேபோல் சாப்ட்பேகங்க் இந்நிறுவனத்தில் 45 சதவீத பங்குகளைக் கொண்டு உள்ளது. இதோடு டைகர் குளோபல் மற்றும் சிகோயா கேப்பிடல் நிறுவனங்கள் சோமேட்டோ க்ரோபர்ஸ் ஆகிய இரு நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications