மோசமான ஐபிஓ, நஷ்ட அளவுகள் தொடர்ந்து உயர்வு ஆகியவற்றின் மூலம் சோமேட்டோ பங்குகள் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், தற்போது சோமேட்டோ நிறுவனம், அதன் முதலீட்டாளர்களும் கொண்டாட முக்கியமான காரணம் கிடைத்துள்ளது.
சோமேட்டோ நிறுவனத்தின் நஷ்ட அளவு பெரிய அளவில் சரிந்துள்ளது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்பட்டாலும், இந்நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி புதிய உச்சத்தை எட்டி, இந்திய ஸ்டார்ட்அப் சந்தைக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
சோமேட்டோ
செப்டம்பர் காலாண்டில் சோமேட்டோ நிறுவனத்தின் அட்ஜெஸ்ட் செய்யப்பட்ட வருவாய் வருடாந்திர அடிப்படையில் 48 சதவீதம் வளர்ச்சி அடைந்து யாரும் எதிர்பார்க்காத 2,107 கோடி ரூபாய் என்ற அளவீட்டை எட்டியுள்ளது.
அட்ஜெஸ்ட் செய்யப்பட்ட வருவாய்
இதன் மூலம் முதல் முறையாகச் சோமேட்டோ நிறுவனத்தின் வருவாய் 1.05 பில்லியன் டாலர் அளவீட்டை எட்டி வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ளது. அட்ஜெஸ்ட் செய்யப்பட்ட வருவாய் என்பது ஆப்ரேஷன்ஸ் மற்றும் கஸ்டமர் டெலிவரி சார்ஜ் ஆகியவற்றைச் சேர்த்த வருவாய்.
1 பில்லியன் டாலர் சாதனை
முதல் முறையாக ஒரு காலாண்டு வருவாய் 1 பில்லியன் டாலர் அளவீட்டை தாண்டியுள்ளது சோமோட்டோ நிறுவனத்தின் புதிய சாதனையாகும். இதன் எதிரொலியாகச் சோமேட்டோ பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 13.60 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
சோமேட்டோ பங்குகள் வளர்ச்சி
ஒரு பங்கு 72.65 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படும் சோமேட்டோ பங்குகள் கடந்த 5 நாட்களில் 15.78 சதவீதமும், ஒரு மாதத்தில் 18.61 சதவீதமும், 6 மாதத்தில் 27.79 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் 2022ல் மொத்தமாக 48.60 சதவீதம் சரிந்துள்ளது. இந்நிலையில் சோமேட்டோ நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை முழுமையாகப் பார்ப்போம். குறிப்பாக ஆகஸ்ட் மாதம் சோமேட்டோ வாங்கிய Blinkit-ன் நிலையைப் பாருங்க.
உணவு டெலிவரி சேவை
இந்தியாவின் மிகப்பெரிய உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ செப்டம்பர் 30 உடன் முடிவடைந்த காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர இழப்பு கடந்த ஆண்டு இதே காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ 434.9 கோடியிலிருந்து 250.8 கோடி ரூபாயாகக் குறைந்ததுள்ளது.
வருவாய்
கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.1,024.2 கோடியாக இருந்த வருவாய் அளவு, இந்த ஆண்டு 62.20 சதவீதம் அதிகரித்து 1,661.3 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று சோமேட்டோ நிறுவனம் பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிகையில் தெரிவித்துள்ளது.
EBITDA இழப்பு
மேலும் இக்காலகட்டத்தில் அட்ஜெஸ்ட் செய்யப்பட்ட EBITDA இழப்பு ரூ.192 கோடியாக அதிகரித்துள்ளது, ஜூன் காலாண்டில் இதன் அளவு ரூ.150 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நஷ்டம் அளவு அதிகரிக்க மிக முக்கியமான காரணம் சோமேட்டோ BLINKIT நிறுவனத்தை இணைத்ததின் மூலம் ஏற்பட்டது.
மொத்த ஆர்டர் மதிப்பு
உணவு டெலிவரி வர்த்தகத்தைப் பொறுத்தவரை, மொத்த ஆர்டர் மதிப்பு (GOV) வளர்ச்சி காலாண்டு அடிப்படையில் 3 சதவிகிதமும், வருடாந்திர அடிப்படையில் 23 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இக்காலகட்டத்தில் ஆர்டர் அளவுகள் மற்றும் சராசரி ஆர்டர் மதிப்பு ஆகிய இரண்டும் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சராசரி வருவாய் வளர்ச்சி
ஒரு ஆர்டருக்கான சராசரி வருவாய் வளர்ச்சி காலாண்டு அடிப்படையில் 8 சதவிகிதமும், வருடாந்திர அடிப்படையில் 27 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் மார்ஜின் அளவு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 2.8 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
Blinkit நிலை
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோமேட்டோ வாங்கிய Blinkit-ன் மொத்த ஆர்டர் மதிப்பு (GOV) வளர்ச்சி காலாண்டு அடிப்படையில் 26 சதவீதம் அதிகரித்து ரூ.1,482 கோடியாக இருந்தது, அதே சமயம் வருவாய் 44 சதவீதம் QoQ அதிகரித்துள்ளது. மேலும் EBITDA இழப்பு முந்தைய காலாண்டில் ரூ.326 கோடியிலிருந்து ரூ.259 கோடியாகக் குறைந்துள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications